அஜித் தன்னுடைய ரசிகை ஒருவருடன் நடனமாடிய வீடியோ ஒன்று, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நீண்ட காலமாகவே பட ப்ரோமோஷன்கள், சினிமா விழாக்கள், பொது நிகழ்ச்சிகள் ஆகியவற்றை அஜித் தவிர்த்து வருகிறார். இதனால் படத்தில் மட்டும் தான் அவரை பார்க்க முடியும் என்ற சூழ்நிலை உள்ளது.
இதனால் ஒவ்வொரு முறையும் அவரது புகைப்படமோ அல்லது வீடியோக்களோ வெளியாகும் போது, அவை சமூக வலைதளங்களில் மிகப்பெரிய அளவில் வைரலாகி விடுகின்றன.
இந்த நிலையில் தற்போது விடாமுயற்சி படப்பிடிப்பில் இருக்கும் அஜித் மனைவி ஷாலினி, மகள் அனோஷ்கா, மகன் ஆத்விக் ஆகியோருடன் சேர்ந்து துபாயில் புத்தாண்டை கொண்டாடி இருக்கிறார்.
Thala Ajith Sir Latest Video From Dubai.
His Reaction To Fans Chant 🔥💪#VidaaMuyarchi #AjithKumar pic.twitter.com/vPrmfM4IGQ
— AJITHKUMAR FANS CLUB (@ThalaAjith_FC) January 2, 2024
இதையடுத்து துபாயில் அவர் படகில் செல்லும் வீடியோ மற்றும் ரசிகை ஒருவருடன் நடனமாடி மகிழ்ந்த வீடியோ ஆகியவை இனையத்தில் வைரலாகி வருகின்றன.
துணிவு படத்தில் இடம்பெற்ற ‘சில்லா சில்லா’ பாடலுக்குத் தான் வெளிநாட்டு ரசிகையின் கையைப்பிடித்து அஜித் நடனம் ஆடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Latest Video of AjithKumar Sir 😍🔥
Celebrating New Year in Dubai #AjithKumar #VidaaMuyarchi pic.twitter.com/KoZ1CfmcAk— Thala AK Rasigan (@ThalaAKRasigan0) January 3, 2024
பொதுவெளியில் அஜித் இதற்கு முன் நடனமாடி வீடியோக்கள் எதுவும் வெளியானது இல்லை என்பதால், இந்த வீடியோ அவரது ரசிகர்களுக்கு புத்தாண்டு ட்ரீட்டாக அமைந்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
-மஞ்சுளா
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை : உச்ச நீதிமன்றத்தில் பொன்முடி மேல்முறையீடு!
பிரதமர் மோடியுடன் என்ன பேசினேன்? – ஓபிஎஸ் பேட்டி!