நடிகர் அஜித் குமார் நடிப்பில் மிகப் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் படம் விடாமுயற்சி.
இந்த படத்தின் படப்பிடிப்புகள் கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில் இறுதிக் கட்ட படப்பிடிப்பு ஜூன் மாதத்தில் தொடங்கும் என்று கூறப்பட்டது.
இதற்கிடையில் அஜித்குமார் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தனது 63 வது படமான “குட் பேட் அக்லி” படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துவிட்டார்.
இந்த படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
அஜித் குமார் ஓகே சொன்ன கையுடன் மிக வேகமாக படப்பிடிப்பு பணிகளை தொடங்கிய ஆதிக் ரவிச்சந்திரன் ஹைதராபாத்தில் சில தினங்களுக்கு முன் படத்தின் ஷூட்டிங்கை தொடங்கி விட்டார்.
குட் பேட் அக்லி படத்தின் ஷூட்டிங்கே தொடங்கி விட்டது, விடாமுயற்சி என்ன ஆனது என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பிக் கொண்டிருந்த நேரத்தில், திடீரென குட் பேட் அக்லி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்தார் ஆதிக் ரவிச்சந்திரன்.
குட் பேட் அட்லி திரைப்படத்தில் அஜித் 3 வித்தியாசமான வேடங்களில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டிருந்த நிலையில், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் நடிகர் அஜித் 3 வித்தியாசமான எக்ஸ்பிரஷன்களை கொடுப்பது போல் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
மங்காத்தா படத்திற்கு பிறகு குட் பேட் அக்லி திரைப்படத்தில் மீண்டும் அஜித் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதால் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதிலிருந்தே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து விட்டது.
மேலும் குட் பேட் அக்லி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரே ஒரு மிகப்பெரிய சாதனையைப் படைத்திருப்பதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் மைத்ரி மூவி மேக்கர்ஸ் அறிவித்து உள்ளது.
குட் பேட் அக்லி படத்தின் போஸ்டருக்கு 41 மில்லியன் வியூஸ் கிடைத்திருக்கிறது. இந்த வியூஸ் எக்ஸ் தளத்தில் மட்டும் என்பதுதான் ஒரு மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது.
ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரின் சாதனையை தொடர்ந்து மற்றொரு சம்பவத்தையும் அஜித்தின் குட் பேட் அக்லி படம் செய்து இருக்கிறது.
அது என்னவென்றால் இந்த படத்தின் ஓடிடி உரிமையை Netflix நிறுவனம் 95 கோடி ரூபாய் கொடுத்து கைப்பற்றி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
வெறும் ஒரு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதற்கு படத்தின் வியாபாரம் இப்படி சூடு பிடித்து உள்ளது.
நிச்சயம் அஜித் – ஆதிக் கூட்டணியில் உருவாகும் குட் பேட் அக்லி திரைப்படம் மிகப்பெரிய ட்ரெண்ட் செட்டராக அமையும் என்று நெட்டிசன்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
KKR vs SRH: முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறிய கொல்கத்தா
நுழைவுத் தேர்வில் மோசடி: எய்ம்ஸ் மருத்துவர்கள் கைது!
டாப் 10 செய்திகள் : காற்றழுத்த தாழ்வு பகுதி முதல் மோடி பிரச்சாரம் வரை!