இந்த 2024-ம் ஆண்டில் பெரிதாக புதிய படங்கள் எதுவும் வெளியாகாத நிலையில், பழைய படங்கள் ரீ-ரிலீஸ் ஆவது அதிகரித்து வருகிறது.
தற்போது திரையரங்குகளில் ‘காதலுக்கு மரியாதை’, ‘வாலி’, ‘வாரணம் ஆயிரம்’, ‘திருமலை’, ‘அண்ணாமலை’, ‘யாரடி நீ மோகினி’ ஆகிய படங்கள் மீண்டும் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வருகின்றன.
திரையரங்குகளில் வாரம்தோறும் வெளியாகும் புதிய படங்களை விட, இதுபோன்ற படங்களைப் பார்த்து ரசித்திட ரசிகர்களும் அதிக ஆர்வம் காட்டுவதால், மார்ச் மாதத்திலும் ரீ-ரிலீஸ் படங்களின் எண்ணிக்கை அதிகமாகும் போல தெரிகிறது.
இந்த நிலையில் மார்ச் 1-ம் தேதி அஜித்தின் ‘சிட்டிசன்’ மற்றும் விஜயின் ‘ஷாஜஹான்’ படங்கள் ரீ-ரிலீஸ் ஆகவுள்ளன. விஜயின் காதல் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதுமே வரவேற்பு இருக்கிறது.
அதேபோல அஜித்தின் ஆக்ஷன் படங்களும் அவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. எனவே தான் இந்த இரண்டு படங்களும் மீண்டும் திரைக்கு வரவிருக்கின்றன.
இதே நாளில் நடிகர் ஜீவாவிற்கு மிகப்பெரிய நட்சத்திர அந்தஸ்தினை அளித்த ‘கோ’ திரைப்படமும் வெளியாகிறது.
இந்தவரிசையில் மார்ச் 3-ம் தேதி 9௦’ஸ் கிட்ஸ் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பினைப் பெற்ற, ஜீவாவின் பிளாக்பஸ்டர் திரைப்படமான ‘சிவா மனசுல சக்தி’ திரைப்படம் வெளியாகவிருக்கிறது.
வாரவிடுமுறையை குறிவைத்து மேற்கண்ட படங்கள் வெளியாகின்றன. 2கே கிட்ஸ்களும் இந்த படங்களை விரும்பி பார்த்து ‘வைப்’ செய்வதால் வசூலிலும் குறைவில்லையாம். எனவே தான் ரீ-ரிலீஸ் படங்கள் திரையரங்குகளில் வெளியாவது அதிகரித்து வருகின்றது.
இதேபோல விஜயின் திரை வாழ்க்கையில் அவரை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்சென்ற ‘கில்லி’ திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 12-ம் தேதி ரீ-ரிலீஸ் ஆகவிருப்பது குறிப்பிடத்தக்கது.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மார்ச் 3-க்கு பிறகு தொகுதி பங்கீடு கையெழுத்து: இந்திய கம்யூனிஸ்ட் நம்பிக்கை!
Video: ”ஹீரோவாக வேண்டாம்” : சர்பராஸ் கானை அதட்டிய ரோஹித்… நடந்தது என்ன?