அஜித் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இதில் அவருடன் இணைந்து அர்ஜுன், ஆரவ், திரிஷா, ரெஜினா ஆகியோர் நடித்து வருகின்றனர்.
பிரமாண்ட பொருட்செலவில் லைகா தயாரிக்கும் இப்படத்தின் ஓடிடி உரிமையை, நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. அனிருத் இசையமைத்து வருகிறார்.
படம் குறித்து பொங்கலுக்கு கூட அப்டேட் எதுவும் வெளியாகவில்லை என்றாலும், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
இந்த நிலையில் இப்படத்தில் அஜித் கதாபாத்திரத்தின் பெயர் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி அஜித் பெயர் அர்ஜுன் என்றும், அர்ஜுன் பெயர் ரக்ஷித் எனவும் கூறப்படுகிறது.
அர்ஜுன் என்ற கதாபாத்திரத்தில் அஜித் நடிப்பதால் தான், படத்தில் அர்ஜுன் இரட்டை வேடங்களில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகின.
தற்போது அது கதாபாத்திரத்தின் பெயர் என்பது தெரியவந்துள்ளது. ஆக்ஷன் காட்சிகளுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்து உருவாகி வரும் விடாமுயற்சி அஜித் பிறந்தநாளான மே 1 அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விடாமுயற்சி படத்திற்கு பின் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், அஜித் தன்னுடைய 63-வது படத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம்: விவாதிக்கப்போவது என்ன?