அஜித் நடிக்கும் ஏகே 61 படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதத்தில் முடிக்கப்பட்டு இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
படத்தைப் பற்றிய அறிவிப்பு எதுவும் வெளியாகாததால் அஜித் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.

இந்தநிலையில், நடிகர் அஜித் குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் உங்கள் காதுகளை பாதுகாத்துக்கொள்ளுங்கள், அளவற்ற அன்புடன் உங்கள் அஜித் என்ற வாசகத்துடன் ட்விட்டர் பதிவை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்ட புகைப்படத்தில், இரண்டு காதுகளிலும் ஒரு வித சத்தம் ஒலித்துக்கொண்டிருந்தால், செவிப்புலன் பாதிப்படையும் என்றும் அந்த பிரச்சனை,
அதிக சத்தங்களை கேட்பதாலும், தலையில் அடிபடுதல் போன்ற காரணங்களாலும், ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காதுகளில் இதுபோன்ற சத்தம் கேட்டால் அதனை உடனடியாக கவனத்தில் கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கும்படி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் இந்த பதிவை, அஜித் ரசிகர்களுக்கு, மற்றவர்கள் விமர்சனங்களை காதில் வாங்கி கொள்ளாதீர்கள் என்று அறிவுரை வழங்கும்படியாக பதிவிடப்பட்டுள்ளது என அவரது ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
செல்வம்