ஏகேவை சந்தித்த எஸ்கே: ஏன் தெரியுமா?

சினிமா

நடிகர் அஜித்குமாருடன் இருக்கும் புகைப்படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

கடந்த 2008 ஆம் ஆண்டு இயக்குனர் ராஜு சுந்தரம் இயக்கத்தில் வெளியான ஏகன் திரைப்படத்தில் நடிகர் அஜித்குமார் உடன் சிவகார்த்திகேயன் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

அவர் நடித்த அந்த காட்சியை சிவகார்த்திகேயனின் ஆரம்பக்கட்ட வெற்றிப்படங்களின்போது அவரின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து சிவகார்த்திகேயன் தற்போது அடைந்துள்ள வளர்ச்சியை புகழ்ந்து நெகிழ்ச்சி அடைந்தனர்.

ajithkumar with sivakarthikeyan latest photo went viral

நடிகர் விஜய்யுடன் விருது வழங்கும் விழாவில் நின்று எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் கொண்டாடி வந்தனர்.
அந்த நிகழ்ச்சியில் ‘குழந்தைகளை எல்லாம் அவரு புடிச்சிட்டாரு ‘ என்று விஜய் கூறியது சிவகார்த்திகேயனுக்கு பெரும் புகழாக மாறியது.

இந்நிலையில், நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் அஜித்குமாரை, சிவகார்த்திகேயன் நேரில் சந்தித்துள்ளார். அப்போது இருவரும் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர். நடிகர் சிவகார்த்திகேயன் அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில் ‘அஜித் சாரை நீண்ட நாள் பிறகு சந்திக்கிறேன். உங்கள் பாசிட்டிவான வார்த்தைகளுக்கு நன்றி மற்றும் வாழ்த்துக்கள் சார்’ என்று கேப்ஷனில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவிவருகிறது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

விஜய்க்கு அபராதம் விதித்த காவல்துறை!

வங்கதேச சுற்றுப்பயணம்: மீண்டும் ரவீந்திர ஜடேஜா விலகல்!

+1
0
+1
2
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.