வைரலாகும் அஜித்தின் துணிவு போஸ்டர்!
எச்.வினோத் இயக்கத்தில் துணிவு திரைப்படத்தில் அஜித் நடித்துள்ளார்.
இந்த திரைப்படத்தில் நடிகர் அஜித்குமார் அதிக தாடியுடன், வெள்ளை நிற முடியுடனும் நடித்து வந்தார். அந்த தோற்றம் ரசிகர்கள் மத்தியிலும் சமூக வலைதளங்களிலும் நல்ல வரவேற்பை பெற்றது.
மேலும் கடந்த ஒரு ஆண்டு காலமாக அதே தோற்றத்தில் நடிகர் அஜித் வலம் வந்தார்.
இந்நிலையில் க்ளீன் சேவ் செய்த அஜித்குமாரின் தோற்றம் சமீபத்தில் வைரலானது இதன் மூலம் கடந்த ஒரு ஆண்டுகள் கழித்து தன்னுடைய தோற்றத்தை அஜித்குமார் மாற்றினார். அதற்கான புகைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில்தான் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக நேற்று நள்ளிரவு துணிவு படத்தின் போஸ்டர் ஒன்று வெளியானது. போஸ்டரில் கையில் துப்பாக்கி வைத்துக்கொண்டு மாஸ் அஜித்தாக இருக்கிறார். அஜித்தின் புதிய ஸ்டில்லை அவரது ரசிகர்கள் ட்ரெண்டு செய்து வருகின்றனர்.
அஜித்குமார் நடித்து வரும் துணிவு திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12 ம் தேதி வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. துணிவு படத்தை தமிழ்நாட்டில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிடுகிறது. வெளிநாடுகளில் இந்த படத்தை லைகா வெளியிடவுள்ளது. இந்த படத்திலிருந்து முதல் பாடல் அடுத்த வாரம் வெளியாகக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
டெல்லி மாநகராட்சி தேர்தல்:அரவிந்த் கெஜ்ரிவாலின் திடீர் ட்வீட்!
யானை லட்சுமிக்கு சுகரும் இல்லை; பிபியும் இல்லை! தீயசக்தியின் நாசவேலையா?