துணிவு பட கொண்டாட்டத்தில் அஜித் ரசிகர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.
அஜித் குமார் நடிப்பில் உருவான துணிவு திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் இன்று (ஜனவரி 11 ) நள்ளிரவு திரையிடப்பட்டது. இதனிடையே விஜய் நடித்த வாரிசு திரைப்படம் அதிகாலை 4 மணிக்கு திரையிடப்பட்டது.
தியேட்டர்களுக்கு உள்ளேயும் , வெளியேயும் அஜித் மற்றும் விஜய் ரசிகர்களின் கொண்டாட்டம் களைகட்டியது.
இந்நிலையில் ,அஜித் நடித்த துணிவு திரைப்படத்தை சென்னை ரோகினி திரையரங்கில் பார்க்க வந்த ரசிகர் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த லாரி மீது நடனம் ஆடியபடி கீழே குதித்தார்.
அப்போது அவருக்கு முதுகுத்தண்டில் கடுமையான காயம் ஏற்பட்டது.

உடனடியாக அவர் கே எம் சி மருத்துவமனையில் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி இளைஞர் உயிரிழந்துள்ளார்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்தது சிந்தாதிரிப்பேட்டை ரிச்சி தெருவை சேர்ந்த பரத்குமார் என்பது தெரியவந்துள்ளது.
இந்த விபத்து குறித்து கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
ஆளுநர் விவகாரம்…விளக்கம் தந்த தமிழக அரசு…சட்டமன்றத்தில் நடந்தது என்ன?
ஆர்.ஆர்.ஆர் படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு கோல்டன் குளோப் விருது