வாரிசு மற்றும் துணிவு படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆக உள்ள நிலையில் மதுரையில் அஜித், விஜய் ரசிகர்கள் போஸ்டர் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
நடிகர் அஜித் நடித்த திரைப்படம் துணிவு, நடிகர் விஜய் நடித்த வாரிசு திரைப்படமும் பொங்கல் அன்று ஒரே நாளில் வெளியாக உள்ளது.
கடந்த 2014-ஆம் ஆண்டு பொங்கலுக்கு ஜில்லா, வீரம் திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாகின. 8 வருடங்களுக்கு பிறகு அஜித், விஜய் நடிக்கும் திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாக உள்ளதால் தல, தளபதி ரசிகர்கள் உற்சாகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
வாரிசு படத்தில் நடிகர் விஜய் பாடியுள்ள ரஞ்சிதமே பாடலும், சிம்பு பாடிய தீ தளபதி ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றது. இந்தநிலையில், வாரிசு திரைப்படத்தின் “Soul Of Varisu” என்ற மூன்றாம் பாடல் வெளியானது.
தமன் இசையில், விவேக் வரிகளில் பின்னணிப் பாடகி சித்ரா பாடியுள்ளார். இந்தப்படத்தை விஜய் ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்திருக்கின்றனர்.
இதேபோன்று ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் 3 வது படம் துணிவு. ‘நேர்கொண்ட பார்வை’, ‘வலிமை’ திரைப்படத்தின் வெற்றிகளால் துணிவும் அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது.
அஜித்தும், விஜய்யும் ஒற்றுமையாக இருந்தாலும் அவர்களது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து மோதலில் ஈடுபடுவது வழக்கம்.
அந்த வகையில் மதுரையில் மீண்டும் அஜித், விஜய் ரசிகர்கள் சற்று வித்தியாசமாக போஸ்டர் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.
மதுரை மாநகர் முழுவதும் இரண்டு பேரின் ரசிகர்களும் மாறி மாறி போஸ்டர் ஒட்டி பரபரப்பை எற்படுத்தி வருகிறார்கள்.
40 தொகுதி மக்களின் வாரிசு தளபதி எங்கள் விஜய் என்று விஜய் ரசிகர்களும், வாய் உதார் வேணா மாட்டிக்காத வீணா, நம்மளோட வேலை பார்த்து ஊரே பேசும் தானா என்ற அஜித் ரசிகர்களும் போட்டி கருத்துக்கள் நிறைந்த போஸ்டர்களை ஒட்டியிருக்கின்றனர்.
கலை.ரா
சாமி கொடுக்குறத பூசாரி கெடுக்கலாமா? நிர்மலாவிடம் குமுறிய பாஜக நிர்வாகிகள்!
மாநில மனித உரிமைகள் ஆணையம்: 2 புதிய உறுப்பினர்கள் தேர்வு!