நீண்ட காத்திருப்புக்கு பிறகு அஜித் ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட்டாக ‘விடாமுயற்சி’ படத்தின் டீசர் கிடைத்துள்ளது.
மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘விடாமுயற்சி’. இப்படத்தில் த்ரிஷா, அர்ஜூன், ரெஜினா, ஆரவ் உள்ளிட்டோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு, அனிருத் இசையமைக்கிறார். ‘விடாமுயற்சி’ படத்தின் பெரும்பாலான காட்சிகள் அஜர்பைஜான் நாட்டில் படமாக்கப்பட்டது.
‘விடாமுயற்சி’ படத்தின் அப்டேட் கேட்டு அஜித் ரசிகர்கள் தொடர்ந்து இணையத்தில் அட்ராசிட்டியில் ஈடுபட்டு வந்தனர். பேருந்து, ரயில், பார்க், தியேட்டர் என அனைத்து இடங்களிலும் ‘அஜித்தே… கடவுளே’ கோஷம் தான் இன்றைய டிரெண்டிங். அந்த அளவுக்கு ‘விடாமுயற்சி’ படத்திற்காக அவர்கள் தீவிரமாக வெயிட் செய்து வந்தனர்.
இந்தநிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில் நேற்று (நவம்பர் 28) இரவு அவர்களுக்கு ஒரு திடீர் சர்ப்ரைஸ் செய்தி அறிவிக்கப்பட்டது. அதுதான் விடாமுயற்சி படத்தின் டீசர் அப்டேட். நேற்று இரவு 11.08 மணிக்கு விடாமுயற்சி டீசர் வெளியானது. இந்த அறிவிப்பை சற்றும் எதிர்பார்த்திராத ரசிகர்கள் கொண்டாட்டத்தில் திக்குமுக்காடினர்.
துப்பாக்கி தோட்டா தெறிக்க தொடங்கும் டீசரின் முதல் காட்சியில், அர்ஜூன் கேங் ஒரு நபரை காரின் டிக்கியில் இருந்து வெளியே எடுத்து போடுகின்றனர். அடுத்தது அஜித்தின் ஸ்டைலிஷான ஷாட், த்ரிஷா என ஒவ்வொரு கதாபாத்திரங்களும் டீசரில் காட்சிப்படுத்தப்படுகிறார்கள்.
‘எல்லோரும் எல்லாமும் கைவிடும் போது உன்னை நம்பு’ என்ற டைட்டில் கார்டுக்கு பிறகு அஜித்தின் கார் சேஸிங், துப்பாக்கிச் சண்டை என டீசர் பரபரக்கிறது. இறுதியில் அஜித் துப்பாக்கியுடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் காட்சியுடன் நிறைவடைகிறது.
இந்த டீசர் ஹாலிவுட் பட பாணியில் இருப்பதாக ரசிகர்கள் பலரும் சோஷியல் மீடியாக்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர். ஓம் பிரகாஷின் காட்சியாக்கம் அஜர்பைஜான் நாட்டை நம்முள் கடத்துகிறது. த்ரில்லர் இசையில் அனிருத் ஸ்கோர் செய்திருக்கிறார்.
எந்தவித பரபரப்பும் இல்லாமல் வெளியான, ‘விடாமுயற்சி’ டீசரை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இப்படம் 2025-ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கொடைக்கானல் மலைப்பூண்டுக்கு கிராக்கி: விவசாயிகள் மகிழ்ச்சி!
கனமழை வார்னிங்… எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?
1 thought on “‘எல்லோரும் எல்லாமும் கைவிடும் போது’… ஹாலிவுட் ஸ்டைலில் ‘விடாமுயற்சி’ டீசர்!”