அஜித் – த்ரிஷா நடிப்பில் உருவாகி வரும் ‘விடாமுயற்சி’படத்தின் 3வது லுக் போஸ்டர் இன்று (ஜூலை 19) வெளியாகியுள்ளது.
கடந்தாண்டு வெளியான துணிவு படத்தை தொடர்ந்து அஜித் தற்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார்.
லைகா புரொடக்ஷன் தயாரித்து வரும் இப்படத்தில் அஜித் ஜோடியாக த்ரிஷா நடித்து வருகிறார். மேலும் ரெஜினா, அர்ஜூன், ஆரவ் ஆகியோரும் இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
ஏற்கெனவே இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்தன.
இந்த நிலையில் நடிகை திரிஷாவுடன் அஜித் இருக்கும் இருக்கும் போஸ்டரை மூன்றாவது லுக்காக லைகா இன்று மாலை வெளியிட்டுள்ளது.
இதுவரை வெளியான போஸ்டர்களில் அஜித் மட்டுமே இருந்த நிலையில், அவை படத்தில் ஆக்சன் காட்சியும், சிறப்பான திரைக்கதையும் இருப்பதை காட்டின.
இந்த நிலையில் த்ரிஷாவுடன் கூலாக அஜித் சிரித்தபடி இருக்கும் 3வது லுக் ரசிகர்களை கவர்ந்த நிலையில் சமூக வலைதளங்களில் தற்போது ட்ரெண்டாகி வருகிறது.
மேலும் ஏற்கெனவே ஜி (2005), கிரீடம் (2007), மங்காத்தா (2011), என்னை அறிந்தால் (2015) ஆகியப் படங்களில் அஜித்துடன் இணைந்து நடித்துள்ள த்ரிஷா அவரது ரசிகர்களின் பாராட்டை பெற்றார். தொடர்ந்து தற்போது விடாமுயற்சிலும் ஜோடி சேர்ந்துள்ள நிலையில் தற்போது வெளியாகியுள்ள போஸ்டரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
மேலும் த்ரிஷா முதன்முறையாக அஜித்துடன் நடித்த ’ஜி’ படத்தின் போஸ்டரை பகிர்ந்து ‘எவர்க்ரீன் ஜோடி’ என்றும் ரசிகர்கள் உருகி வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
ஜாபர் சாதிக் : அமலாக்கத்துறை காவல் நீட்டிப்பு!
ஆடு ஜீவிதம்… ரயில்… அஞ்சாமை: எந்தெந்த ஓடிடியில் எந்தெந்த படம்?