இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் AK 61 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் இன்று (செப்டம்பர் 21 ) வெளியாகியுள்ளது.
ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் உருவாகிவரும் இந்தப்படத்திற்கு ‘துணிவு’ என்று பெயரிடப்பட்டுள்ளது.தயாரிப்பாளர் போனி கபூர் ,இயக்குநர் ஹெச்.வினோத் மற்றும் அஜித்குமார் கூட்டணியில் உருவாகும் மூன்றாவது படம் இது.
வங்கி கொள்ளையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் இதன் படப்பிடிப்பு ஹைதராபாத், பாங்காங், விசாகப்பட்டினம் உள்ளிட்ட பல இடங்களில் நடைபெற்றது. இந்த படத்தில் நாயகியாக பிரபல நடிகை மஞ்சுவாரியர் நடித்துள்ளார்.

ஏற்கனவே 80 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. மீதமுள்ள படப்பிடிப்பு தாய்லாந்து நாட்டில் நடைபெறுகிறது. இதற்காக படக்குழுவினர் அங்கு சென்று விட்ட நிலையில் அஜித் வரும் செப்டம்பர் 23 ஆம் தேதி தாய்லாந்து செல்ல இருக்கிறார்.

நேர்கொண்ட பார்வை , வலிமை படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்த நிலையில், துணிவு படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.
இவர் ஹெச்.வினோத் இயக்கத்தில் வெளியான தீரன் அதிகாரம் ஒன்று படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
அஜித் 61 பட டைட்டில் அறிவிப்பு எப்போது?
சமந்தாவுக்கு என்னாச்சு? சிகிச்சைக்காக வெளிநாடு பயணம்!