டாப் டிரெண்டிங்கில் துணிவு டிரெய்லர்!

சினிமா

அஜித்தின் துணிவு படத்தின் டிரெய்லர் வெளியான 24 மணி நேரத்தில் 2.3 கோடி பார்வைகளைக் கடந்து யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.

எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் துணிவு படம் உருவாகியுள்ளது. நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களைத் தொடர்ந்து 3வது முறையாக எச். வினோத், அஜித் மற்றும் போனி கபூர் கூட்டணி இணைந்துள்ளது.

இப்படத்தில் நடிகை மஞ்சு வாரியர், இயக்குநர் சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ள இப்படத்தின் தமிழ்நாட்டு வெளியீட்டு உரிமத்தை உதயநிதியின் ரெட் ஜெயின்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையில், “சில்லா சில்லா, காசேதான் கடவுளடா, கேங்ஸ்டா” ஆகிய மூன்று பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

தொடர்ந்து டிசம்பர் 30 ஆம் தேதி துணிவு படத்தின் கதாபாத்திரங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. ஆனால் அஜித் நடிக்கும் கதாபாத்திரத்தின் பெயரை மட்டும் அறிமுகம் செய்யாமல் டிசம்பர் 31 ஆம் தேதி மாலை டிரெய்லர் வெளியாகும் என்ற சுவாரஸ்யமான செய்தியைப் படக்குழு வெளியிட்டது.

அறிவித்தபடியே துணிவு படத்தின் டிரெய்லர் நேற்று (டிசம்பர் 31) மாலை வெளியிடப்பட்டது. டிரெய்லர் வெளியான ஒரு மணி நேரத்திற்குள்ளேயே 30 லட்சம் பார்வைகளைக் கடந்து இணையத்தை ஆக்கிரமிக்கத் தொடங்கியது.

வருடத்தின் கடைசி நாளில் வெளியான துணிவு டிரெய்லரை அஜித் ரசிகர்கள் திரையரங்குகளுக்குச் சென்று பார்த்து கொண்டாடினர். தற்போது துணிவு படத்தின் டிரெய்லர் யூடியூப் டிரெண்டிங்கில் முதல் இடத்தில் உள்ளது.

ajith thunivu trailer in you tube trending ajith

அதுமட்டுமின்றி டிரெய்லர் வெளியான 24 மணி நேரத்தில் 2.3 கோடி பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது. இந்த சாதனையைப் படக்குழு மட்டுமின்றி ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர்.

”மலேசியா அஜித் ஃபேன்ஸ் கிளப்” டிரெய்லர் வெளியானதை ஒரு நிகழ்ச்சியாகவே ஏற்பாடு செய்துள்ளனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் துணிவு “டி ஷர்ட்” அணிந்து கொண்டு பங்கேற்றுள்ளனர்.

அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்குப் பரிசுகளையும் வழங்கி சிறப்பித்துள்ளனர்.

மோனிஷா

இடைநிலை ஆசிரியர்களுக்கு ஸ்டாலின் கொடுத்த வாக்குறுதி என்னாச்சு? ஓபிஎஸ் கேள்வி!

விரைவில் அதிமுக மாநாடு!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *