நடிகர் அஜித் குமார் துணிவு படத்தை தொடர்ந்து ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்துள்ளார். மகிழ்திருமேனி இயக்கியுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.
அர்ஜுன், த்ரிஷா, ரெஜினா கசான்ட்ரா, நிகில் நாயர் மற்றும் பலர் அஜித்துடன் நடித்துள்ளனர்.
பொங்கலுக்கு இந்த படம் ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டு தற்போது ரிலீஸ் தேதி தள்ளி போயுள்ளது.
ஆனால், விடாமுயற்சி படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது. தொடர்ந்து படத்தின் முதல் பாடலான ‘சவதீகா’ பாடல் வெளியாகி குழந்தைகள் முதல் பெரியவர்கள வரை பலரிடமும் வரவேற்பை பெற்றது.
இந்தநிலையில் படத்தின் அடுத்த பாடல் நாளை காலை 10:45 மணிக்கு வெளியாகும் என்று லைகா நிறுவனம் நேற்று அறிவித்திருந்தது.
அதன்படி விஷ்ணு எடாவன் வரிகளில் அனிருத் மற்றும் யோகி சேகர் இணைந்து பாடியுள்ள, ‘பத்திக்கிச்சு ஒரு ராட்ச்ச திரி, வெடிச்சுதான் இது தீருமே… ரத்தம் ஒரு சொட்டு மிச்சமிருந்தாலும்… என்னைக்கும் விடாமுயற்சி’ பாடலை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இந்த பாடல் வெளியாகி 5 நிமிடங்களில் 35 ஆயிரம் பார்வைகளையும் 21 லைக்குகளையும் பெற்றுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
“விஜய்க்கு பதில் ராகுல் ” : செல்வப்பெருந்தகைக்கு அண்ணாமலை அட்வைஸ்!