லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில், நடிகர் அஜித்குமார், த்ரிஷா, சஞ்சய் தத், பிக் பாஸ் ஆரவ் ஆகியோர் நடிப்பில், இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் ’விடாமுயற்சி’.
நீண்ட நாட்களாக படப்பிடிப்பு தொடங்கப்படாமல் இருந்த விடாமுயற்சிக்கு கடந்த அக்டோபர் 4ஆம் தேதி தான் விடிவு காலம் பிறந்தது. அதாவது படப்பிடிப்பு தொடங்கப்பட்டது.
விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள நடிகர் அஜித், த்ரிஷா, சஞ்சய் தத் ஆகியோர் அஜர்பைஜான் நாட்டிற்கு சென்றுள்ளனர்.
இந்த நிலையில் விடாமுயற்சி படத்தின் அப்டேட்டுகள் வெளியாகும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் நடிகர் அஜித்தின் பைக் டூர் குறித்த அப்டேட் தான் வெளியாகி இருக்கிறது.
அப்போ விடாமுயற்சி படப்பிடிப்பு என்ன ஆகும்..? என்று நீங்கள் மைண்ட் வாய்ஸில் நினைப்பது கேட்கிறது. பொறுமையாக முழு விவரத்தை படியுங்கள்.
நடிகர் அஜித்குமாரின் மக்கள் தொடர்பு அதிகாரியான சுரேஷ் சந்திரா தனது எக்ஸ் பக்கத்தில் நடிகர் அஜித்குமார் புதிதாக தொடங்கிய வீனஸ் மோட்டார் சைக்கிள் டூர்ஸ் கம்பெனி குறித்த ஒரு முக்கிய தகவலை எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையில், ”நடிகர் அஜித்குமார் ’வீனஸ் மோட்டார் சைக்கிள் டூர்ஸ்’ என்கின்ற பைக் டூர் நிறுவனத்தை அதிகாரப்பூர்வமாக தொடங்கி விட்டார்.
இந்த பைக் டூர் துறையில் அதிக அனுபவம் வாய்ந்தவர்களுடைய வழிகாட்டுதலின்படி டூர்கள் அமைத்து தரப்படும். முதற்கட்டமாக ராஜஸ்தான், அரபு நாடுகள், ஓமன், தாய்லாந்து மற்றும் நியூசிலாந்து ஆகிய இடங்களுக்கு பைக் டூர் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த பயணத்திற்கான வழிகள், இடையில் தங்குவதற்கான இடங்கள் என அனைத்தையும் எங்கள் குழுவினர் சிறப்பாகத் திட்டமிட்டு ஏற்பாடு செய்துள்ளனர்.
வரும் அக்டோபர் 23ஆம் தேதி வீனஸ் நிறுவனத்தின் முதல் டூர் தொடங்க இருக்கிறது. அரபு நாடுகளுக்கும் (UAE), ஓமன் நாட்டிற்கும் வீனஸ் நிறுவனத்தின் முதல் டூர் ஆரம்பமாகும். அந்த பயணத்தில் மலைகள், கடற்கரைகள், நகரங்கள் மற்றும் பல அட்வென்சர்கள் நிறைந்த பகுதிகளில் பயணிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது” என்று சுரேஷ் சந்திரா அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு வெளியானவுடன் அஜித்தின் இந்த புதிய முயற்சிக்கு ரசிகர்கள் தங்கள் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். அதேசமயம் விடாமுயற்சி அப்டேட்டை நினைத்து பெருமூச்சும் விடுகின்றனர்.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தமிழக அரசு மீது திட்டமிட்டு அவதூறு: ஆளுநருக்கு துரைமுருகன் கண்டனம்!
சொத்து வரி 1% அபராத தொகையை ரத்து செய்க: எடப்பாடி வலியுறுத்தல்!
டிஜிட்டல் திண்ணை: டெல்லி கோபப்பட்டால்… எடப்பாடியின் டெரர் ரியாக்ஷன்!
மீண்டும் தங்கம் விலை குறைந்தது: இன்றைய நிலவரம்!