இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் படம் விடாமுயற்சி. இது அஜித்தின் 62 வது படம்.
இந்த படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைபெற்றது. இந்த படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.
இந்த படத்தில் திரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் சஞ்சய் தத் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து அஜித்தின் 63 வது படத்தை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க இருப்பதாக சில நாட்களுக்கு முன்பு தகவல் வெளியானது.
அஜித் குமார் நடிப்பு வெளியான நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித் குமார் உடன் இணைந்து ஆதிக் ரவிச்சந்திரனும் சில காட்சிகளில் நடித்திருந்தார்.
மேலும் ஆதிக்க ரவிச்சந்திரன் கடைசியாக இயக்கிய மார்க்க ஆண்டனி படம் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.
அந்த படத்தில் அஜித் குமார் பற்றிய குறியீடுகளை வைத்து தான் ஒரு மிகப்பெரிய அஜித் ரசிகன் என்பதை வெளிக்காட்டினார். அது மட்டும் இல்லாமல் பல நேர்காணல்களில் தான் ஒரு அஜித் ரசிகன் என்று வெளிப்படையாக சொல்லி இருந்தார் ஆதிக் ரவிச்சந்திரன்.
அஜித்தின் 63வது படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க மைத்ரி மூவி மேக்கர்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது என்று தகவல் வெளியானதை தொடர்ந்து, தற்போது இந்தப் படத்தின் அலுவலக பூஜை சென்னையில் பொங்கல் அன்று நடந்துள்ளது.
இதன் மூலம் ஆதிக் இயக்கத்தில் அஜித்தின் 63வது படம் உருவாக இருப்பது உறுதியாகி உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் இறுதி அல்லது மே முதல் வாரம் தொடங்க இருக்கிறது.
அஜித்தின் 63 வது படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் ஆதி இயக்கத்தில் மார்க் ஆண்டனி படத்தில் மாஸ் காட்டிய நடிகர் எஸ் ஜே சூர்யா AK 63 படத்தில் அஜித்துடன் இணைந்து நடிக்க இருப்பதாகவும், இந்த படத்திற்காக நடிகர் அஜித்திற்கு 165 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
– கார்த்திக் ராஜா
பிரித்விராஜ் உடன் மலையாள திரையுலகில் கால் பதிக்கும் யோகி பாபு
ரிப்பீட் சூப்பர் ஓவரில் இந்தியா ’த்ரில்’ வெற்றி பெற்றது எப்படி? : ரோகித் விளக்கம்!
ஏவுகணைத் தாக்குதல் எதிரொலி: ஈரான் தூதரை வெளியேற்றிய பாகிஸ்தான்!
நாட்டின் பொருளாதார நிலை: ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் விளக்கம்!