தந்தையை இழந்த நடிகர் அஜித்தின் வீட்டிற்கு நடிகர் விஜய் நேரில் சென்று இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருக்கும் அஜித்குமாரின் தந்தை பி.சுப்ரமணியம் ( வயது 85) நீண்ட நாட்களாக உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (மார்ச் 24 )அதிகாலை காலமானார்.
நடிகர் அஜித்குமாரின் தந்தை மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திரையுலகினர் இரங்கல் தெரிவித்தனர்.
இதையடுத்து, எங்கள் தந்தையாரின் இறுதி சடங்குகள் ஒரு குடும்ப நிகழ்வாகவே இருக்க கருதுகிறோம்.
இறுதி சடங்குகளை தனிப்பட்ட முறையில் செய்ய ஒத்துழைக்கும்படி வேண்டிக்கொள்கிறோம் என அஜித் தரப்பு அறிக்கை வெளியிட்டது. இதையடுத்து நடிகர் அஜித்தின் தந்தை பி.சுப்ரமணியம் உடல் பெசன்ட்நகர் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இந்நிலையில், சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அஜித் வீட்டிற்கு சென்று நடிகர் விஜய் ஆறுதல் கூறியுள்ளார்.
தற்போது நடிகர் அஜித்தை விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளது அஜித் மற்றும் விஜய் ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
தந்தையின் இறுதிசடங்கு: அஜித் வேண்டுகோள்!
டி.எம்.எஸ் சாலையைத் திறந்து வைத்தார் முதல்வர்