“விடாமுயற்சி” படத்தை தொடர்ந்து அஜித்தின் 63 வது படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் AK 63 படத்திற்கு “குட் பேட் அக்லி” என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்த டைட்டில் அறிவிப்பை முன்னிட்டு ஒரு போஸ்டரையும் படக் குழு வெளியிட்டிருந்தது.
இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க, நடிகர் எஸ்.ஜே.சூர்யா அஜித்திக்கு வில்லன் ஆக நடிக்க போகிறார் என்றும் நடிகர் அரவிந்த் சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்றும் கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி நடிகை தபு இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து நடிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில் தற்போது “குட் பேட் அக்லி” திரைப்படத்தில் நடிகர் அஜித்துடன் இணைந்து நடிகை சிம்ரனும் நடிகை மீனாவும் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் அஜித்தும் நடிகை சிம்ரனும் இணைந்து நடித்த “வாலி” திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. அதேபோல் நடிகர் அஜித்துடன் நடிகை மீனா இணைந்து நடித்த “சிட்டிசன்”, “வில்லன்” ஆகிய திரைப்படங்கள் வெற்றி பெற்றது மட்டுமின்றி நடிகர் அஜித்தை ஒரு கமர்சியல் ஹீரோ அந்தஸ்துக்கு உயர்த்தியது.
நடிகைகள் சிம்ரனும், மீனாவும் “குட் பேட் அக்லி” திரைப்படத்தில் நடிக்கிறார்களா? இல்லையா? என்பது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்றாலும் இவர்கள் இணைந்து நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு “மார்க் ஆண்டனி” படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்து மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்ததால் அஜித்தின் “குட் பேட் அக்லி” திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஊட்டி வரலாற்றில் முதன்முறையாக 29 டிகிரி செல்சியஸ் வெயில்!
கமல் வசனத்துக்கு கவுண்டர் கொடுத்த அர்ஜுன் தாஸ்!