அருள்நிதி நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு டிமான்ட்டி காலனி திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றது. இந்த படத்தை அஜய் ஞானமுத்து இயக்கியிருந்தார். ஹாரர் திரில்லர் கதை களத்தில் வெளியான இந்த படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
அதைத்தொடர்ந்து எட்டு வருடங்கள் கழித்து ‘டிமான்ட்டி காலனி ‘ படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது.
அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள ‘டிமான்ட்டி காலனி 2’ படத்தில் அருள்நிதி, பிரியா பவானி சங்கர், அருண்பாண்டியன், விஜே அர்ச்சனா, மீனாட்சி கோவிந்தராஜன், முத்துக்குமார் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். பி டி ஜி யுனிவர்சல் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. சாம் சி எஸ் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
ஆகஸ்ட் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியான டிமான்டி காலனி – 2 கடந்த நான்கு நாட்களில் சுமார் 12 கோடி ரூபாய் மொத்த வசூல் செய்து பாக்ஸ் ஆபீஸில் ஹிட்டடித்துள்ளது.
இந்த நிலையில் படத்தின் இயக்குநர் அஜய் ஞானமுத்து படத்தின் அடுத்த பாகம் குறித்து பேசுகையில், படத்தின் தொடர்ச்சியாக அடுத்து இரண்டு பாகங்கள் எடுக்கப்போவதாக கூறியுள்ளார்.
அடுத்த வேறு ஒரு படம் இயக்கிவிட்டு மீண்டும் டிமான்ட்டி காலனி-3 படத்தை இயக்கப்போவதாகவும். 3ம் பாகம் 2026ம் ஆண்டு வெளியாகும் என கூறியுள்ளார்.
இராமானுஜம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
“என்ன ஆச்சு எடப்பாடி பழனிசாமிக்கு?” : திமுகவை விமர்சித்த எடப்பாடி… ஆ.ராசா ஆவேச பதிலடி!
ரீல்ஸ்: வீலிங் செய்த பைக்கை பாலத்தில் இருந்து கீழே வீசிய மக்கள்!
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் அலட்சியம்: ராமதாஸ் கண்டனம்!
சமத்துவம், சமூக நீதி, கூட்டாட்சி: அதிகாரத்தைப் பரவலாக்குவது எப்படி?