ஷங்கர் மகளுக்கு ‘கோலாகலமாக’ நடந்த திருமணம்… திரண்டு வந்த திரையுலகினர்!

Published On:

| By Manjula

இயக்குநர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா-தருண் கார்த்திகேயன் திருமணம் நடந்து முடிந்துள்ளது.

தமிழின் பிரமாண்ட இயக்குநர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா. மருத்துவரான இவருக்கும் உதவி இயக்குநர் தருண் கார்த்திகேயனுக்கும் கடந்த பிப்ரவரி மாதம் நிச்சயதார்த்தம் சிம்பிளாக நடந்தது.

இந்தநிலையில் இன்று (ஏப்ரல் 15) ஐஸ்வர்யா-தருண் கார்த்திகேயன் திருமணம் பிரமாண்டமாக நடந்து முடிந்துள்ளது. இந்த திருமண விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் நேரில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

இதேபோல ரஜினிகாந்த், கமல்ஹாசன், விக்ரம், சூர்யா, கார்த்தி இயக்குநர் மணிரத்னம், சுஹாசினி மணிரத்னம் விக்னேஷ் சிவன், நயன்தாரா என ஒட்டுமொத்த திரையுலகினருமே திரண்டு வந்து வாழ்த்தியுள்ளனர்.

ஷங்கர் தற்போது கமல்ஹாசன் நடிப்பில் ‘இந்தியன் 2’, தெலுங்கின் முன்னணி ஹீரோ ராம்சரணின் நடிப்பில் ‘கேம் சேஞ்சர்’ ஆகிய படங்களை இயக்கி வருகிறார். இதில் இந்தியன் 2 ஜூன் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

-மஞ்சுளா 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

“GST: வரி அல்ல… வழிப்பறி” : புள்ளிவிவரத்துடன் ஸ்டாலின் விமர்சனம்!

பிரபல சீரியல் நடிகைக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்… வைரல் ஆகும் பதிவு…!

புதிய பிசினஸ் ‘ஆரம்பித்த’ அறந்தாங்கி நிஷா… குவியும் வாழ்த்துகள்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel