நடிகர் ரஜினிகாந்த் சங்கி கிடையாது, அவர் மனிதநேயவாதி என்று ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
விஷ்ணு விஷால், விக்ராந்த் நடிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் லால் சலாம். நடிகர் ரஜினிகாந்த் இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். லால் சலாம் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை தாம்பரத்தில் நேற்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பேசும்போது, “சில நேரங்களில் சோஷியல் மீடியாவுல அப்பா பத்தி நிறைய மீம்ஸ் வரும், அதை பார்க்கும்போது வருத்தமா இருக்கும். அப்பாவை சங்கின்னு சிலர் சமூக வலைதளங்கள ட்ரோல் செய்றாங்க
சங்கின்னா என்னனு என் நண்பர்கள் கிட்ட கேட்டேன். ஒரு அரசியல் நிலைப்பாட்ட சார்ந்து இருக்குறவங்கள சங்கின்னு சொல்லுவாங்கன்னு சொன்னாங்க.
இந்த இடத்துல நான் தெளிவா சொல்லுறேன். அவரு சங்கி இல்லை. அவரு சங்கியா இருந்தா லால் சலாம் படத்துல நடிச்சிருக்க மாட்டாரு. இந்த படத்தோட அரசியல் புரிஞ்சிக்கிட்டு தான் அப்பா இந்த படத்துல நடிக்க சம்மதிச்சாங்க.
ஒரு மனிதநேயவாதி மட்டும் தான் இந்த மாதிரி படத்துல நடிக்க முடியும். அந்த தைரியம் அவருக்கு மட்டும் தான் இருக்கு” என்று ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தெரிவித்தார்.
நடிகர் ரஜினிகாந்த் சங்கி இல்லை என்று ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பேசியது குறித்து சமூக வலைதளங்களில் பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அற்புதமான உறவுகள் அமைய விரும்புபவர்கள் என்ன செய்ய வேண்டும்?
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!