don't speak politics for promote lal salaam

அரசியல் பேசி படம் ஓட வேண்டும் என்ற தேவையில்லை: ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

சினிமா

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள படம், ‘லால் சலாம்’. விக்ராந்த், விஷ்ணு விஷால் இருவரும் இணைந்து நடித்திருக்கும் இந்தப் படத்தில் ‘மொய்தீன் பாய்’ என்ற கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். லைகா புரடெக்க்ஷன் சார்பில் சுபாஷ்கரன் படத்தை தயாரித்துள்ளார். don’t speak politics for promote lal salaam

பிப்ரவரி 9 அன்று படம் வெளியாவதை முன்னிட்டு படத்தின் டிரைலர் பத்திரிகையாளர்களுக்கு நேற்று மாலை சென்னை சத்யம் தியேட்டரில் திரையிடப்பட்டது.

அந்த நிகழ்வில் படத்தின் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பேசிய போது,

ஒரு ஊரில் நடக்கும் கிரிக்கெட் மேட்ச். அந்த போட்டியில் நடக்கும் பிரச்சினையால் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை. விளையாட்டு வினையாக முடிந்தால் என்ன நடக்கும் என்பது தான் படம் சொல்ல வரும் விஷயம்.

இந்தப் படம் அரசியல் பேசுகிறதா என்றால், ஆம் மக்கள் சார்ந்த ஒரு சிறிய அரசியலைப் பேசுகிறது. அரசியல் எல்லாவற்றிலும் இருக்கிறது. அது நாம் பார்வையை பொறுத்து மாறுகிறது. நீங்கள் செய்யும் வேலைக்கு நேர்மையாகவும், நம்பிக்கையாகவும் இருந்தால் மலையைக் கூட கட்டி இழுத்துவிடலாம்.

செந்தில் இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரைச் சுற்றிதான் படம் நகரும். கதாபாத்திரமாகவே அவர் வாழ்ந்தார். படம் வந்ததும், ஏ.ஆர்.ரஹ்மானின் ஒரிஜனல் சவுண்ட் ட்ராக் வெளியாகும். 90-ஸ் ரஹ்மானின் கம்பேக்கை இந்தப் படத்தில் பார்க்க முடியும்.

படத்தை ஒரு மியூசிக்கல் படமாக மாற்றிவிட்டார் ஏ.ஆர்.ரஹ்மான். அப்பா குறித்து இசை வெளியீட்டு விழாவில் பேசிவிட்டேன். இப்போது பேச வேண்டாம் என நினைக்கிறேன். ஒரு விஷயத்தை இப்போது சொல்ல ஆசைப்படுகிறேன். இசை வெளியீட்டு விழா அன்று நான் என்ன பேசப் போகிறேன் என்பது கூட அப்பாவுக்கு தெரியாது.

நான் அதிகம் பேசமாட்டேன் என்ற தைரியத்தில் அமர்ந்திருந்தார். ஆனால் நான் அவருக்கு அதிர்ச்சி கொடுத்துவிட்டேன். விமான நிலையத்தில் செய்தியாளர்கள் அவரிடம், இசை வெளியீட்டு விழாவில் பேசியது ‘லால் சலாம்’ படத்தின் விளம்பர யுக்தியா என கேட்டுள்ளனர்.

இப்படியான எந்த ஐடியாவும் எங்களுக்கு இல்லை. அப்படி பேசி படம் ஓட வேண்டும் என்ற தேவையுமில்லை. என்னையும் சரி, என் சகோதரியையும் சரி, எங்களின் சொந்த கருத்துரிமையை ஊக்குவிக்கும் அப்பாவாகவே இன்று வரை இருந்து வருகிறார்.

don't speak politics for promote lal salaam

நடிகர் விஷ்ணு விஷால் 

அது என்னவோ தெரியவில்லை நான் நடிக்கும் படங்கள் அனைத்தையும் ரெட் ஜெயண்ட் நிறுவனமே தொடர்ந்து வெளியிடுகிறது. அதுவும் ஹிட் ஆகி விடுகிறது.

ரஜினி சாருடன், நடிக்க அனைவரும் ஏங்கும் சூழலில் அந்த வாய்ப்பு எனக்கு கிடைத்தது. படத்தின் ஹீரோ கதை தான். அது தான் ரஜினி சாரையும் நடிக்க ஒப்புக்கொள்ள வைத்தது.  ஒரு மகளாகவும் இயக்குனராகவும் ஐஸ்வர்யாவுக்கு நிறைய நெருக்கடிகள் இருந்தது. நடிகர் ரஜினிக்கு வைத்த முதல் ஷாட்டே அவர் நடந்து வருவது போல எடுத்த காட்சி தான். அதை செட்டில் இருந்த அனைவரும் மிகவும் எதிர்பார்ப்போடு பார்த்தோம்.முதல் முறையாக படம் ரீலீஸ் அன்று நிம்மதியாக இருக்க போகிறேன்.

படத்துக்கு நிச்சயம் நல்ல ஒப்பனிங் இருக்கத் தான் போகிறது. அது நிச்சயம் எங்களுக்காக இல்லை. ரஜினிக்காக தான். அதனால் படம் ரிலீஸ் அன்று நிம்மதியாக தூங்கப் போகிறேன். சமீபத்தில் இந்தியா என்ற பெயரை பாரத் என மாற்றுவது குறித்து ஒரு பதிவு போட்டேன். எனக்கு அரசியல் ஞானம் சுத்தமாக கிடையாது.

என்னுடைய கருத்தை தான் சொன்னேன். அதற்காக என்னை வெறுக்கும் அளவுக்கு பல கண்டனங்கள் எனக்கு சமூகவலைதளங்களில் பதிவானது. ஒரே நாளில் Anti Indian-ஆக மாற்றப்பட்டேன். எங்கு பார்த்தாலும் வெறுப்புணர்வு தான் இருக்கு. அது குறித்து தான் இந்த படம் பேசவுள்ளது. ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து, நம்பிக்கை இருக்கும். அதை மதிக்க வேண்டும். ரஜினி மகளாக இருந்தாலும் யாரும் வாய்ப்பு தர மாட்டார்கள். இங்கு  வெற்றி மட்டும் தான் பேசும்.

don't speak politics for promote lal salaam

நடிகர் விக்ராந்த் 

இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கு மிக்க நன்றி. காரணம் என் வாழ்க்கையில் மிக முக்கியமான காலக்கட்டத்தில் இருந்தேன். சினிமாவுக்கு வந்து 16, 17 ஆண்டுகள் ஆகிவிட்டது. சரியாகத்தான் இருக்கிறோம். எங்கே மிஸ் ஆனது என தெரியவில்லை. சினிமா போதும் என்ற எண்ணத்தில் இருந்தேன்.

அப்போது தான் ஐஸ்வர்யா ரஜினிகாந்திடமிருந்து கால் வந்தது. சிறிய கதாபாத்திரமாக இருக்கும் என்று தான் நினைத்தேன். அவரிடம் முதலில் கேட்ட கேள்வி வில்லன் கதாபாத்திரமா என்று கேட்டேன். ஆனால், இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தை கொடுத்தார்.

அப்போது தான் நான் ஒன்றை நம்பினேன். கடவுள் எனக்கு கொடுத்த கிஃப்ட் இது. சினிமாவில் தொடர்ந்து இருக்க வேண்டும் என்று நான் நம்பிய தருணம் அது. அதற்காக இயக்குநர் ஐஸ்வர்யாவுக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளேன்.

நான் சரியாக நடிக்கிறேனா இல்லையா என்று என் மீது எனக்கு சந்தேகம் இருந்தது. அப்படியிருக்கும்போது ரஜினிகாந்த் 2, 3 முறை என்னை அழைத்து, ‘நீ ரொம்ப நல்லா பண்ற’ என பாராட்டினார். ஒரு காட்சியில் என்னை கட்டியணைத்து பாராட்டினார். அதன்பிறகு என் மீதான நம்பிக்கை அதிகரித்துவிட்டது. அவருடன் நடித்த நாட்கள் வாழ்க்கையில் மறக்க முடியாது.

ராமானுஜம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் இன்று தமிழகம் வருகை!

ஹெல்த் டிப்ஸ்: கம்ப்யூட்டரில் நீண்ட நேரம் பணிபுரிபவர்களா நீங்கள்?

பட்ஜெட் என்றால் என்ன? ஏன் முக்கியமானது? – முழு விவரம்!

அதானியின் உலகிலேயே மிகப்பெரிய காப்பர் ஆலை: எதற்காக?

don’t speak politics for promote lal salaam

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *