காக்கா முட்டை, வடசென்னை, கனா என தொடர்ந்து தனக்கு ஏற்ற கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து அனைவரும் பாராட்டும் வகையில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.
சமீபகாலமாக கதையின் நாயகியாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான சொப்பன சுந்தரி, ஃபர்ஹானா, டிரைவர் ஜமுனா, தி கிரேட் இந்தியன் கிச்சன் போன்ற படங்கள் எதிர்ப்பார்த்த வெற்றியை தரவில்லை என்றாலும், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பிற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
அடுத்ததாக நடிகர் அர்ஜூனின் ‘தீயவர் குலைகள் நடுங்க’ திரைப்படம், நடிகர் விஷ்ணு விஷாலின் ‘மோகன்தாஸ்’ ஆகிய படங்கள் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியாக உள்ளது.
இந்நிலையில் மீண்டும் கதையின் நாயகியாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஓர் புதிய படத்தில் கமிட்டாகி உள்ளார். இந்த படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் நடிகர் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்.
சவரி முத்து இயக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். இந்த படத்தை துவாரகா ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
– கார்த்திக் ராஜா
இந்த மாதம் ரூ.1000 எப்போது? : தீபாவளிக்கு முன் வழங்கப்படுமா?