சாண்டல்வுட்டில் களமிறங்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்… ஹீரோ யாருன்னு பாருங்க!

தமிழின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஐஸ்வர்யா ராஜேஷ் கன்னட திரையுலகில் என்ட்ரி கொடுக்கவுள்ளார்.

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் கடைசியாக டியர் படம் வெளியானது. தற்போது அவரின் கைவசம் கருப்பர் நகரம், தீயவர் குலைகள் நடுங்க, மோகன்தாஸ் போன்ற தமிழ் படங்களும், அஜயண்டே ராண்டம் மோசனம் மற்றும் ஹெர் ஆகிய மலையாள படங்களும் உள்ளன.

இந்தநிலையில் தற்போது கன்னட படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

கன்னட சூப்பர்ஸ்டார் சிவராஜ்குமாரின் படத்தில், அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கவிருக்கிறாராம்.

சிவராஜ்குமார் நடிப்பில் உருவாகி வரும் உத்தரகாண்டா படத்தை ரோஹித் படக்கி இயக்கி வருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா நடிக்க உள்ளார்.

இதற்காக ஐஸ்வர்யாவிடம் படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி அவரின் கால்ஷீட்டை உறுதி செய்துள்ளனர். விரைவில் இப்படத்தில் ஐஸ்வர்யா இணைந்தது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்தாண்டு ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தில் சிவராஜ்குமாரின் நடிப்பு வெகுவாக ரசிகர்களால் பாராட்டப்பட்டது.

இதனால் தமிழிலும் அவரது ரசிகர்கள் எண்ணிக்கை விரிவடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

மஞ்சுளா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

புதிய சீரியலில் களம் இறங்கும் ‘பிக்பாஸ்’ பிரபலம்!

வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்… பக்தர்கள் பரவசம்!

சொத்து வரி: ஏப்ரல் 30-க்குள் செலுத்தினால் 5% தள்ளுபடி… தவறினால் 1% வட்டி!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts