காக்கா முட்டை, வடசென்னை, கனா போன்ற படங்களின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.
இவர் சமீபகாலமாக கதையின் நாயகியாக தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். தமிழ் மொழி மட்டுமின்றி தெலுங்கு சினிமா வட்டாரத்திலும் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்து விட்டார்.
தற்போது ஐஸ்வர்யா ராஜேஷும், யோகி பாபுவும் இணைந்து ஓர் புதிய படத்தில் நடிக்க உள்ளார்கள் என்ற அறிவிப்பு வெளியானது. அந்த படத்தை சவரி முத்து இயக்குகிறார். படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். துவாரகா ஸ்டுடியோஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டது.
இந்நிலையில், ஐஸ்வர்யா ராஜேஷ் யோகி பாபு இணைந்து நடிக்கும் படத்தின் டைட்டிலை ஐஸ்வர்யா ராஜேஷ் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று (ஜனவரி 10) படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த படத்திற்கு “சிஸ்டர்” என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் மருத்துவ செவிலியர் கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். சிஸ்டர் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், யோகி பாபு உடன் இணைந்து நகைச்சுவை நடிகர் ரெட்டின் கிங்ஸ்லியும் நடிக்கின்றார். ஐஸ்வர்யா ராஜேஷின் சிஸ்டர் படம் காமெடி கலந்த ஆக்சன் திரில்லர் படமாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் தீயவர் குலைகள் நடுங்க திரைப்படம், மோகன்தாஸ், டியர் ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளது.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ரேஷன் கடைகளுக்கு விடுமுறை இல்லை!
“திரும்பி வந்துட்டோம்னு சொல்லு”: தமிழ் தலைவாஸ் அபார வெற்றி!
பியூட்டி டிப்ஸ்: பற்களின் நிறம் திடீரென்று மாறுகிறதா?
சென்னை தீவுத்திடல் பொருட்காட்சி எப்போது?