சொப்பன சுந்தரியாக ஐஸ்வர்யா ராஜேஷ்

Published On:

| By Kavi

வெளிநாடுகளில் பல இந்தியத் திரைப்படங்களை விநியோகம் செய்த முன்னணி நிறுவனமான ஹம்சினி என்டர்டெய்ன்மென்ட் தற்போது ஹியூபாக்ஸ் ஸ்டுடியோஸ் உடன் இணைந்து தமிழில் தங்களது முதல் படத்தைத் தயாரித்துள்ளது.

காக்கா முட்டை படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக நடித்து கவனம் ஈர்த்த ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகி என்பதை காட்டிலும் கதையின் நாயகியாக நடித்த படங்கள் ஏராளம்.

ஒரு வருடகாலம் மதுரை நடனா நாட்டியா திரையரங்கில் ஓடி சாதனை நிகழ்த்திய படம் கரகாட்டக்காரன்.

இந்த படத்தில் கவுண்டமணியும், செந்திலும் பேசிய “சொப்பன சுந்தரி” என்கிற டயலாக் பிரபலமானது. இன்று வரை கரகாட்டகாரன் டயலாக் உயிர்ப்புடன் உள்ளது

கதையின் நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கும் படத்திற்கு ‘சொப்பன சுந்தரி’ என பெயரிடப்பட்டு, அதன் முதல் பார்வை நேற்று வெளியிடப்பட்டது.

இதனுடன் ‘சொப்பன சுந்தரி’ என்ற டைட்டிலுக்கான பிரத்யேக காணொளி ஒன்றையும் படக்குழுவினர் வெளியிட்டிருக்கிறார்கள்.

aishwarya rajesh new movie

‘லாக்கப்’ படத்தை இயக்கிய இயக்குநர் எஸ். ஜி. சார்லஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இத்திரைப்படத்தில் கதையின் நாயகியாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கிறார்.

இவருடன் தேசிய விருது பெற்ற லட்சுமி பிரியா, தீபா ஷங்கர், கருணாகரன், ரெடின் கிங்ஸ்லி, மைம் கோபி, சுனில் ரெட்டி, அகஸ்டின், பிஜான், தென்றல் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

பாலமுருகன் மற்றும் விக்னேஷ் ராஜகோபாலன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்குப் படத்தொகுப்புப் பணிகளை சரத்குமார் கவனிக்க, கலை இயக்கத்தை ரவி பாண்டியன் மேற்கொண்டிருக்கிறார்.

இந்த திரைப்படத்திற்கு அஜ்மல் மற்றும் சிவாத்மிகா இசையமைத்துள்ளனர். டார்க் காமெடி ஜானரில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஹியூபாக்ஸ் ஸ்டுடியோஸ் மற்றும் ஹம்சினி என்டர்டெய்ன்மென்ட் இணைந்து பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறது.

டார்க் காமெடியில் தயாராகி இருக்கும் ‘சொப்பன சுந்தரி’ தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமான பெயர்.

அதனால் ஐஸ்வர்யா ராஜேஷ் நகைச்சுவை வேடத்தில் நடித்திருக்கும் ‘சொப்பன சுந்தரி’ படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
இராமானுஜம்

அரசு விருது பட்டியலில் நயன்தாரா, ஆர்யா, ஐஸ்வர்யா ராஜேஷ், திருமதி செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share