ishwaryarai

இன்ஸ்டாவில் ஐஸ்வர்யாராய் பின்தொடரும் ஒரே நபர்… யார் தெரியுமா?

சினிமா

நடிகர் அபிஷேக் பச்சனுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் திருமணம் நடந்து 15 ஆண்டுகளுக்கு மேலாகிறது. வாழ்க்கை இவ்வளவு அழகாக சென்று கொண்டிருந்த சமயத்தில் திடீரென இவர்கள் இருவரும் விவாகரத்து செய்யப் போவதாக செய்திகள் வெளியாகி அவரது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இதற்கிடையே , தாஸ்வி படத்தில் தன்னுடன் நடித்த நிம்ரத் கவுருடன் அபிஷேக் உறவில் இருப்பதாக தகவல் வெளியானது. இதை நடிகை நிம்ரத் மறுத்திருந்தார். யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் சொல்லிவிட்டு போகட்டும். நான் என் வேலையில் கவனம் செலுத்தப் போகிறேன் என்று கூறியிருந்தார். அபிஷேக் பச்சன் இதுகுறித்து எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

இந்த நிலையில், ஐஸ்வர்யா ராய் பற்றி சுவாரஸ்யத் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இன்ஸ்டாகிராமில் நடிகை ஐஸ்வர்யா ராயை 1.4 கோடி பேர் பின்பற்றுகின்றனர். ஆனால், ஐஸ்வர்யா  ஒரே ஒருவரைத்தான் இன்ஸ்டாவில்  பின் தொடருகிறார். அவர், வேறு யாருமல்ல கணவர் அபிஷேக் பச்சன்தான். அதே போல நடிகர் அபிஷேக் பச்சனும் ஐஸ்வர்யா ராயை பின்தொடருகிறார்.

கடந்த 2002 ஆம் ஆண்டு நடிகை கரிஷ்மா கபூருக்கும் அபிஷேக் பச்சனுக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால், பல்வேறு காரணங்களால் அந்த திருமணம் நடைபெறவில்லை. பின்னர், கரிஷ்மா தொழிலதிபர் சஞ்சய் கபூரை மணந்தார். 2016 ஆம் ஆண்டு அவரை விட்டு கரிஷ்மா பிரிந்து விட்டார்.

1997 ஆம் ஆண்டு ஐஸ்வர்யா ராய் உலக அழகி பட்டம் வென்றதும், மணிரத்னத்தின் இருவர் படத்தில் அறிமுகமானார். அதே போல, பாலிவுட்டிலும் பல படங்களில் நடித்தார். தற்போது, அவருக்கு 51 வயதாகிறது. கடந்த 2007 ஆம் ஆண்டு அபிஷேக் பச்சனை திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு ஆராத்யா என்ற மகள் உண்டு. தொழிலதிபர் முகேஷ் அம்பானி மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்துக்கு ஐஸ்வர்யா தனது மகளுடன் தனியாக வந்தார். அதில், இருந்து அபிஷேக் பச்சனும்  ஐஸ்வர்யாவும் பிரிந்து விடப் போவதாக வதந்தி கிளம்பி ஓடிக் கொண்டிருக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

 இந்து கோவிலை தாக்கிய கும்பலில் இருந்த கனடா போலீஸ்… காட்டிக் கொடுத்த வீடியோ!

ஈரான் நாட்டில் வாழும் யூதர்கள்… 20 வயது இளைஞருக்கு தூக்கு!

+1
0
+1
2
+1
0
+1
1
+1
1
+1
2
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *