பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28 அன்று வெளியாக உள்ளது. அதனை முன்னிட்டு படத்தின் டிரைலர், இசை வெளியீட்டு விழா நேற்று (மார்ச் 29) மாலை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
இந்த விழாவில் நடிகர் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
அப்போது பேசிய அவர், “உயிரே உறவே தமிழே எந்த மேடைக்கு போனாலும் இந்த வார்த்தை மாறாது. அது கீழே உட்கார்ந்து இருக்கும் சிம்புவுக்கு தெரியும்.
என்னிடம் என்னுடைய ஷெட்டியூல் என்ன என்று கேட்பார்கள். எப்படி இப்படி வேலை செய்கிறீர்கள் என்பார்கள். நான் வேலைக்கு சென்று மிக நீண்ட நாட்கள் ஆகிவிட்டது.
நான் பிடித்ததை செய்ய பணம் கொடுக்கிறார்கள். எனக்கும் இயக்குநர் மணிரத்னத்திற்குமான தொடர்பு நாயகனுக்கு முன்பு தொடங்கியது. இப்போதும் தொடர்கிறது.
இதை மணிரத்னத்திற்கான பாராட்டு விழா என்று நினைத்து கொள்ளலாம். நேற்று முன்தினம் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் பிரமாண்டமான ஆர்க்கெஸ்ட்ரா மூலம் இசை ஒன்றை எனக்கு செய்து காண்பித்தார். நான் நெகிழ்ந்து விட்டேன். என்னால் பேச கூட முடியவில்லை.
பின்னர், ஏ. ஆர்.ரஹ்மானிடம் பேசினேன். இப்படிப்பட்ட கலைஞர்கள் ஒன்று சேர்ந்ததில் பெருமை.
காதலா வீரமா என்றார்கள்… அது மணிரத்னத்தின் காதல். கல்கியின் மீது அவர் கொண்ட காதல். நானும் அவருக்கு காதலர்தான்.
ஐஸ்வர்யாராய் மீண்டும் உலக அழகி என்பதை பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் மணிரத்னம் காண்பித்து விட்டார். எல்லோரும் பொன்னியின் செல்வனை எப்படி எடுக்க முடியும் என்றார்கள். ஆனால் மணி செய்து காண்பித்துவிட்டார்“ என்றார்.
இராமானுஜம்
தோனியிடம் கற்றுக்கொண்டது: மனம் திறந்த ஸ்டீவ் ஸ்மித்
அதிமுக பாஜக கூட்டணி: எடப்பாடி பழனிசாமி பதில்!