தமிழ் சினிமாவில் சூப்பர்ஸ்டாரான ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா கோலிவுட்டில் படங்களை இயக்கி வருகிறார். கடைசியாக ‘லால் சலாம்’ படம் இவரது இயக்கத்தில் வெளிவந்தது.
இந்த நிலையில், இயக்குநர்கள் சங்கம் சார்பில் நேற்று சென்னையில் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இதில் சங்கத் தலைவர் ஆர்.வி. உதயகுமார், செயலாளர் பேரரசு, பொருளாளர் சரண், பெப்ஸி தலைவர் ஆர்.கே. செல்வமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த், “என்னுடைய படக் குழுவில் இருந்த உதவி இயக்குநர்களுக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறேன். தற்போது நிறைய உதவி இயக்குநர்களிடமிருந்து எனக்கு போன் வருகிறது. குழந்தைகள் படிப்பு செலவிற்கு உதவுங்கள் என்று நேரடியாக எனக்கு போன் செய்து உதவி கேட்கின்றனர்.
இதில் உண்மை சொல்வது யாரு? அல்லது பொய் சொல்கிறார்களா என்று எனக்கு தெரியவில்லை. அப்படி நான் உதவி செய்தால் அது சரியான நபர்களுக்கு போய் சேருமா? என்று தெரியவில்லை. என்ன உதவி செய்தாலும் அது சரியான நபர்களுக்கு போய் சேர வேண்டும் என்ற எண்ணம் எனக்கு உண்டு. இதன் காரணமாக இயக்குநர் சங்கத்தினை அணுகி என்னோட கருத்தை கூறினேன். ஆண்டுதோறும் 10 லட்சம் வழங்கவும் முடிவு செய்துள்ளேன்..
நான் செய்யும் இந்த சிறிய உதவி யாராவது ஒரு குழந்தையையோ, தாயாரையோ மகிழ்ச்சி படுத்தினால், அது எனக்கு சந்தோசமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
36 லட்சம் மக்களுக்கு 20 லட்சம் முத்ரா கணக்குகளா? – கோவையில் குழம்பிய நிர்மலா சீதாராமன்
புலியை கொன்று ரத்தத்தை உதட்டில் வைத்தார்- யுவராஜ் தந்தை யோக்ராஜ் புது கதை!