நடிகர் பகத் ஃபாசில் தன்னுடைய பிரபலமான பட கதாபாத்திரம் ஒன்று முதலில் நடிகர் தனுஷூக்கு தான் எழுதப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.
மலையாளத்தில் வெளியாகிப் பரவலான பாராட்டுகளைப் பெற்ற படங்களில் ‘கும்பளங்கி நைட்ஸ்’ படமும் ஒன்று. இதில் பகத் ஃபாசில் ஷாமி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். சமூகத்தில் பெரும்பாலும் இருக்கக்கூடிய ஆணாதிக்கம் செலுத்தும் கணவனாக இதில் நடித்திருப்பார். இந்த பாத்திரம் படத்தின் எதிர்மறை கதாபாத்திரமாகவும் சித்தரிக்கப்பட்டு இருக்கும்.
இந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டியில், “கும்பளங்கி நைட்ஸ்’ படத்தில் என்னுடைய கதாபாத்திரமான ஷாமி நடிகர் தனுஷூக்காக தான் முதலில் எழுதப்பட்டது. ஆனால், அந்த சமயத்தில் மலையாள சினிமாவிற்குள் தனுஷை கொண்டு வர முடியாத ஒரு சூழல் இருந்தது’ என கூறியுள்ளார். இந்த படத்தின் தயாரிப்பாளர்களில் பகத்தும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுமட்டுமல்லாமல், அல்லு அர்ஜூடன் பகத் வில்லனாக நடித்த ‘புஷ்பா’ படத்தின் இரண்டாம் பாகத்தை அடுத்த ஆண்டு வெளியிடப் படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. இரண்டாம் பாகம் மட்டுமில்லாமல் படத்தின் மூன்றாம் பாகமும் வெளியாகும் என இயக்குநர் சுகுமார் தன்னிடம் தெரிவித்ததையும் மகிழ்வோடு பகிர்ந்திருக்கிறார் பகத்.
ஆதிரா