நடிகை ராதா மீது மீண்டும் போலீசில் புகார்!

சினிமா

பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்னையில் ஒருவரை தாக்கியதாக நடிகை ராதா மீது வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மறைந்த நடிகர் முரளி நடித்த ‘சுந்தரா டிராவல்ஸ்’ காமெடி திரைப்படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை ராதா.  அந்த படம் அவருக்கு சிறந்த அறிமுக படமாக அமைந்தாலும், அடுத்து அவர் நடித்த படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை தரவில்லை.

பின்னர் தயாரிப்பாளர் ஒருவரை திருமணம் செய்து கொண்ட ராதா, அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தார்.

பின்னர் கடந்த 2020 ஆம் ஆண்டு முன் சப் -இன்ஸ்பெக்டர் வசந்த ராஜா என்பவரை திருமணம் செய்து கொண்டு சாலிகிராமத்தில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்தார்.

ஆனால் தன் மீது சந்தேகப்பட்டு வசந்த ராஜா அடித்து துன்புறுத்துவதாகவும், கொலை மிரட்டல் விடுப்பதாகவும்  காவல்நிலையத்தில் ராதா புகார் அளித்தது பரபரப்பாக பேசப்பட்டது.

இந்த நிலையில் பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சினையில் சென்னை நெற்குன்றத்தை சேர்ந்த முரளி என்பவரை தாக்கியதாக ராதா மீது வடபழனி காவல் நிலையத்தில் இன்று புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தலையில் படுகாயமடைந்த முரளி, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

முன்னதாக, கடந்த மார்ச் மாதம் பிரான்சிஸ் என்ற இளைஞரை தாக்கியதாக நடிகை ராதா மீதும் அவரது மகன் தருண் மீதும் போலீசில் புகார் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

T20 WorldCup : 15 வீரர்கள் கொண்ட அணியை அறிவித்தது நியூசிலாந்து!

Gold Rate: சற்று குறைந்த தங்கம் விலை… எவ்வளவு தெரியுமா?

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *