விஜய் சேதுபதியின் 50 ஆவது படமான மகாராஜா கடந்த 14ஆம் தேதி வெளியாகி திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்ராஜ் நட்டி, பாய்ஸ் மணிகண்டன் மற்றும் சிங்கம்புலி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
படத்தின் திரைக்கதையை நான் லீனியராக வடிவமைத்த இயக்குநர் நித்திலனும், படத்தொகுப்பாளர் பிலோமின் ராஜும் ரசிகர்களால் வெகு சிறப்பாக பாராட்டப்பட்டு வருகின்றனர்.
தற்போது தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடகாவிலும் கொண்டாடப்படும் மகாராஜா திரைப்படம் விரைவில் ரூ.100 கோடியை வசூலை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்த சிங்கம் புலி நமது ’மின்னம்பலம் பிளஸ்’ யூடியுப் தளத்திற்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பல சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
என்னை திட்டுறாங்க!
அவர் கூறுகையில், ”மாயாண்டி குடும்பத்தார் படத்தில் நான் நடித்ததில் இருந்து நான் திரையில் வந்தாலே, ‘இவன் சிரிக்க வைக்கப் போறானு’ என்னை மக்கள் பார்ப்பார்கள். ஆனால் மகாராஜா பார்த்து விட்டு வரும் பலரும் என்னை தொடர்பு கொண்டு ‘நீங்க இப்படி ஒரு கேரக்டர் பண்ணுவீங்கனு நெனச்சே பாக்கல’னு சொல்றாங்க. பலர் என்னை திட்டுறாங்க. அதுதான் என் நடிப்புக்கான வெற்றியாக பார்க்கிறேன்.
நித்திலன் தான் கற்றுக்கொடுத்தார்!
இந்த படித்தில் நடிக்கும்போது நித்திலனை ரொம்ப தொல்லை கொடுத்துவிட்டேன். மற்ற படங்களில் என்னுடைய டப்பிங்கை ஒரே நாளில் முடித்துவிடுவேன். ஆனால் இந்த படத்தில் நான் டப்பிங் பேச 8 நாட்கள் எடுத்துக்கொண்டேன். அனைத்தையும் அவர் பொறுமையுடன் ஏற்றுக்கொண்டார். மேலும் இந்த படத்தில் எனக்கு ஒரு மேனரிசத்தையும் அவர் கற்றுக்கொடுத்தார்” என்று சிங்கம்புலி பேசியுள்ளார்.
முழு வீடியோவை காண இங்கே ????கிளிக் செய்யவும்!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
சென்னை: பெண்ணை கொம்பில் முட்டி இழுத்துச் சென்ற எருமை மாடு!
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் : எடப்பாடிக்கு ஆர்.எஸ்.பாரதி சவால்!