பிக்பாஸ் வீட்டில் மீண்டும் ஒரு டபுள் எவிக்ஷன் நிகழ்ந்துள்ளது. ரவீனாவை தொடர்ந்து மற்றுமொரு போட்டியாளர் வெளியேறியுள்ளார்.
இன்னும் 10 நாட்களில் பைனல் நடைபெற இருப்பதால் பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் டபுள் எவிக்ஷன் இருக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் ரவீனாவை மட்டுமே பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றி இருப்பதாக கூறப்பட்டது. இதனால் ரசிகர்களும் இது என்ன பாஸ் பித்தலாட்டம்? என சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சனம் செய்து வந்தனர்.
இந்த நிலையில் ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றும் வகையில் மீண்டும் ஒரு போட்டியாளர் வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார்.
நிக்ஸன் தான் அந்த மற்றொரு போட்டியாளர். இதனால் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களின் எண்ணிக்கை தற்போது 8 ஆக குறைந்துள்ளது.
வீட்டினுள் தற்போது தினேஷ், விஷ்ணு, விஜய் வர்மா, அர்ச்சனா, மணி சந்திரா, மாயா, பூர்ணிமா, விசித்ரா என வலிமையான போட்டியாளர்களே எஞ்சியுள்ளனர்.
எனவே பைனலுக்கு செல்லப்போகும் அந்த 5 போட்டியாளர்கள் யாராக இருக்கும்? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
-மஞ்சுளா
புத்தாண்டு: திமுகவினருக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு!
தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை… அமித் ஷாவிடம் புகார் அளிக்கும் நிர்மலா சீதாராமன்?