உலகம் முழுவதும் இன்று புத்தாண்டு தினம் மிகவும் விமரிசையாகவும், கோலாகலமாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் பிக்பாஸ் வீட்டிலும் புத்தாண்டு மிகுந்த சிறப்பாக போட்டியாளர்களால் கொண்டாடப்பட்டது. வீட்டில் இருந்து ரவீனா, நிக்ஸன் என அடுத்தடுத்து இரண்டு போட்டியாளர்கள் வெளியேறி இருக்கின்றனர்.
இதனால் தற்போது வீட்டினுள் உள்ள போட்டியாளர்கள் எண்ணிக்கை தற்போது 8 ஆக குறைந்துள்ளது. இவர்களில் யார் பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆகப்போகிறார் என்பது தான் ரசிகர்களின் மத்தியில் இருக்கக்கூடிய மிகப்பெரிய கேள்வி.
இதற்கிடையில் வீட்டில் இருந்து ரவீனா வெளியேறி இருப்பதால், மணியை சக போட்டியாளர்கள் கிண்டலடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
அதில் யூத் படத்தில் சக்கரை நிலவே பாடலை பாடி தினேஷ், விஷ்ணு இருவரும் மணியை கிண்டலடிக்கின்றனர்.
#Vishnu #Dinesh attack #Mani 😂
"Sugamana kural yar endral #Raveena vin kural enpen" 🤣#BiggBossTamil7 #BiggBoss7Tamilpic.twitter.com/EvOVWQbO7W
— Sekar 𝕏 (@itzSekar) December 31, 2023
குறிப்பாக ‘சுகமான குரல் யார் என்றால் ரவீனாவின் குரல் என்பேன்’, ‘என்னை விட்டு ஏன் எலிமினேட் ஆனாய்’ போன்ற வரிகளை கேட்டு மணியே விழுந்து, விழுந்து சிரிக்கிறார்.
இதனால் நீண்ட நாட்களுக்கு பிறகு பிக்பாஸ் வீடு மகிழ்ச்சியால் நிறைந்து காணப்படுகிறது. இறுதிப்போட்டி வரை இது இப்படியே இருக்குமா? என்பதை நாம் பொறுத்திருந்து பார்க்கலாம்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
-மஞ்சுளா
TheGOAT2ndLook : அர்ச்சனாவிடம் உறுதி செய்த வெங்கட் பிரபு!
சீறிப்பாய்ந்தது பி.எஸ்.எல்.வி-சி58 : புத்தாண்டில் இஸ்ரோ சாதனை!