ராஷ்மிகாவை தொடர்ந்து கத்ரீனா கைஃப்… தொடரும் DeepFake அட்டூழியங்கள்!

Published On:

| By Manjula

நடிகை ராஷ்மிகாவைத் தொடர்ந்து பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்பின் போலி புகைப்படம் ஒன்றும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

AI தொழில்நுட்பம் மூலம் எந்தவொரு புகைப்படம், வீடியோவையும் தங்களுக்கு ஏற்றாற்போல மாற்றிக்கொள்ள முடியும் என்ற விபரீத  நிலை உருவாகியுள்ளது. குறிப்பாக நடிகைகளின் வீடியோக்கள், புகைப்படங்கள் மார்பிங் செய்யப்பட்டு வெளியிடப்படுகின்றன.

நேற்று (நவம்பர் 6) நடிகை ராஷ்மிகா மந்தனா Deep Fake வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களை அதிர வைத்தது. இன்று (நவம்பர் 7) நடிகை கத்ரீனா கைப்பின் போலியான புகைப்படம் மோசமாக மார்பிங் செய்யப்பட்டு வெளியாகி இருக்கிறது. டைகர் 3 படத்தில் கத்ரீனா துண்டு அணிந்து காட்சி ஒன்றில் நடித்திருக்கிறார். இதை Deep Fake மூலம் மிகவும் மோசமாக சித்தரித்து வெளியிட்டுள்ளனர்.

இதை பார்த்த ரசிகர்கள் மிகவும் நல்ல தொழில்நுட்பம் ஒன்றை இப்படி தவறான விஷயங்களுக்கு பயன்படுத்துவது மிகவும் வேதனையாக உள்ளது எனவும்,  AI தொழில்நுட்பம் நாளுக்கு நாள் மோசமாகி கொண்டே செல்கிறது இதற்கு அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதுபோல போலி வீடியோக்கள் வெளியிட்டால் 3 ஆண்டு சிறை தண்டனை கிடைக்கும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசு எச்சரித்த பிறகும் இதுபோன்று தொடர்வது அதிர்ச்சியளிப்பதாகவும் உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

-மஞ்சுளா 

நாகா சமூகத்தை ஆர்.எஸ்.பாரதி கேவலப்படுத்துகிறார்: இல.கணேசன்

விமர்சனம்: கருடன்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share