சினிமா அவ்வளவுதானா? துபாயில் அஜித் அதிர்ச்சிப் பேட்டி!

Published On:

| By Kumaresan M

நடிகர் அஜித்குமார் துபாயில் நடைபெறும் 24 Hours ரேஸில் தனது குழுவினருடன் கலந்துகொள்ள இருக்கிறார். இரு நாட்களுக்கு முன்பு , டிராக்கில் நடந்த பயிற்சியின் போது அவரின் கார் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் சிறு காயம் கூட படாமல் உயிர் தப்பினார். எனினும், அடுத்த நாளே அவர் மீண்டும் பயிற்சியில் ஈடுபட்டது அவரின் தன்னம்பிக்கையையும் தைரியத்தையும் எடுத்து காட்டியது .அஜித்குமார் குழு கலந்து கொள்ளும் முதல் சர்வதேச போட்டி இதுவாகும். இந்த ரேஸ் தொடரில் அஜித்குமார் குழுவில் அவருடன் சேர்ந்து மேலும் 3 வீரர்கள் பங்கேற்கின்றனர்.

அஜித்தின் விடா முயற்சி படம் பொங்கலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதுவும் தள்ளிப் போயிருக்கிறது.

இந்த நிலையில், துபாயில் செய்தியாளர்களுக்கு அஜித்குமார் பேட்டியளித்துள்ளார். அதில், ’18 வயதில் இருந்து மோட்டார் ரேஸ்களில் பங்கேற்று வருகிறேன். இடையில் திரைத்துறையில் இருந்ததால் பங்கேற்க முடியவில்லை. இப்போது, மீண்டும் ரேஸ் பக்கம் திரும்பியுள்ளேன். இந்த ரேஸ் தொடர் முடிந்த பிறகே மீண்டும் சினிமா பக்கம் வருவேன் . ரேஸ் இல்லாத காலங்களில் மட்டுமே படங்களில் நடிப்பேன்’ என்று தெரிவித்துள்ளார்.

இந்த ரேஸில் ஒவ்வொரு குழுவிலும் 2 முதல் 4 டிரைவர்கள் இடம் பெற்றிருப்பார்கள். மொத்தம் 24 மணி நேரம் ரேஸ் நடைபெறும். குழுவின் கேப்டன் மட்டுமே 14 முதல் 18 மணி நேரம் காரை ஓட்ட வேண்டும். இன்று துபாய் 24 ஹவர்ஸ் ரேஸ் தொடங்குகிறது, நடிகர் அஜித்தின் குழு வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பு அவரது ரசிகர்களிடம் அதிகரித்திருக்கிறது.

தற்போது இந்த தொடரின் நடப்பு சாம்பியனாக ஆஸ்திரியாவை சேர்ந்த எஸ்டாலென்ட் ரேஸிங் குழு உள்ளது.இந்த ரேஸில் புரஃபரஷனல் கார் பந்தய வீரர்கள், செமி புரஃபஷனல் கார் பந்தய வீரர்கள் மற்றும் உள்ளூர் வீரர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்பது சிறப்பம்சம்.

ஏற்கனவே விஜய் சினிமாவுக்கு முழுக்கு போட்டு அரசியலுக்கு வந்திருக்கிற நிலையில், அஜித் தோ சினிமாவுக்கு இடைவெளி கொடுத்து ரேஸுக்கு போகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

கூடுதல் நிதி ஒதுக்கியும் தமிழ்நாட்டுக்கு வரி பகிர்வு குறைவு: எவ்வளவுனு பாருங்க?

’நாங்கள் இரட்டை வேடம்னா, நீங்கள் நான்கு வேடம்’- சட்டமன்றத்தில் ஸ்டாலின் vs எடப்பாடி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel