keerthi pandian tweet goes viral

திடீரென பற்றியெரிந்த கார்… கீர்த்தி பாண்டியன் ட்வீட்டால்… அடுத்து நடந்த ட்விஸ்ட்!

சினிமா

திடீரென கார் பற்றியெரிந்த விவகாரத்தில், நடிகை கீர்த்தி பாண்டியனின் ட்வீட் தற்போது வைரலாகி வருகிறது.

சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் சரவணகுமார் என்பவர் தன்னுடைய எலெக்ட்ரிக் கார் பற்றி எரிந்த நிலையில், தகுந்த பதில் அந்த நிறுவனத்திடம் இருந்து கிடைக்கவில்லை என நேற்று (டிசம்பர் 25) ட்வீட் செய்திருந்தார்.

அதில், ”6 வாரங்களுக்கு முன் MG ZS EV எலெக்ட்ரிக் காரை 26.61 லட்சங்கள் கொடுத்து வாங்கினேன். பார்க்கிங்கில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த அந்த கார் திடீரென பற்றியெரிந்தது.

என்னுடைய குடும்பத்தினரும், அக்கம் பக்கத்தினரும் இதைப்பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்தனர். சம்பவம் நிகழ்ந்து 3௦ நிமிடங்களுக்கு பிறகே தீயணைப்பு துறையினர் அந்த இடத்திற்கு வந்தனர்.

ஆனால் இதுகுறித்து பலமுறை புகார் செய்தும் சம்பந்தப்பட்ட நிறுவனம் இதற்கு இன்னும் பதில் அளிக்கவில்லை,” என வருத்தத்துடன் பகிர்ந்திருந்தார்.

இந்த ட்வீட்டை பார்த்த நடிகை கீர்த்தி பாண்டியன் அதை க்வோட் செய்து, ” இது என்னுடைய பக்கத்து வீட்டை சேர்ந்த சரவணகுமாரின் கார்.

அவருக்கு சிறு குழந்தைகளும், வயதான பெற்றோரும் உள்ளனர். இந்த சம்பவம் நடந்த போது அவர்கள் பக்கத்தில் இருந்து அவர்களுக்கு எதுவும் ஆகியிருந்தால் என்ன செய்வது?

இதுபோன்ற சூழ்நிலையில் வாடிக்கையாளர்களுக்கு பதில் அளிக்காமல் இருப்பது அமைதியாக இருப்பது பொறுப்பில்லாத செயல்,” என காட்டமாக விமர்சித்து இருந்தார். அவரின் இந்த பதிவு வைரலானது.

இதையடுத்து எம்ஜி நிறுவனத்தின் வாடிக்கையாளர் மையம் இதற்கு பதில் அளித்துள்ளது. அதில், ” அன்புள்ள கீர்த்தி. இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் குறித்து நாங்கள் அறிந்துள்ளோம்.

சம்பவம் நடந்த நாளில் இருந்து நாங்கள் வாடிக்கையாளருடன் தொடர்பில் இருக்கிறோம். வாடிக்கையாளருக்கு சிறந்த தீர்வை வழங்கிட எங்கள் குழு முழுமையான ஒத்துழைப்பை வழங்கி வருகிறது,” என விளக்கம் அளித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

-மஞ்சுளா 

எடப்பாடிக்கு மனசாட்சி இருக்கிறதா?: ஓபிஎஸ் கேள்வி!

உடனடியாக கொடுப்பதுதான் ‘ரிலீஃப்’ – திட்டக் குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன் ஆவேசம்!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *