பிக்பாஸ்: இந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறிய போட்டியாளர் இவர் தான்!

Published On:

| By Manjula

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறிய போட்டியாளர் யார்? என்பது குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.

இன்னும் 4 வாரங்களில் பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்திற்கு வந்து விடும். பைனலில் வரப்போகும் அந்த 5 போட்டியாளர்கள் யாராக இருக்கும்? என்பது தான் ரசிகர்களின் கேள்வியாக உள்ளது.

இதற்கிடையில் இந்த வாரம் வெளியேறிய மற்றொரு போட்டியாளர் யார்? என்பது தெரிய வந்துள்ளது. நாம் ஏற்கனவே சொன்னபடி கூல் சுரேஷ் தான் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார்.

வீட்டுக்கு போக வேண்டும் என்று தொடர்ந்து கஜினி முகமது போல முயற்சி செய்து வந்த சுரேஷின் ஆசை, தற்போது நிறைவேறியுள்ளது.

நிகழ்ச்சியில் இதுகுறித்து கமல், ”இனிமே நீங்க சுவரேறி குதிக்க வேண்டாம்” என கூறியதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இது நாளைய (ஞாயிற்றுக்கிழமை) நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகும். இந்த வாரம் ட்ரிபிள் எவிக்ஷன் இருக்கலாம் என கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது அது டபுள் எவிக்ஷன் ஆக மாறியுள்ளது.

பிக்பாஸ் வீட்டுக்குள் தினேஷ், விசித்ரா, மாயா, பூர்ணிமா, மணி சந்திரா, ரவீனா, விஜய் வர்மா, நிக்ஸன், அர்ச்சனா, விஷ்ணு, சரவண விக்ரம் என மொத்தம் 11 போட்டியாளர்கள் இருக்கின்றனர்.

இவர்களில் யார் பிக்பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னர் ஆவார்கள் என்பதை நாம் பொறுத்திருந்து பார்க்கலாம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

-மஞ்சுளா 

IPL2024: ‘இதயம் உடைந்தது’ முன்னணி வீரரால்… வெளிச்சத்துக்கு வரும் உண்மைகள்!

சட்டமீறலில் விக்னேஷ் சிவன்… நீதிமன்றம் செல்லும் தயாரிப்பாளர்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share