கரண் அர்ஜுன் மற்றும் சப்சே படா கிலாடி போன்ற படங்களில் நடித்த பிரபல பாலிவுட் நடிகை மம்தா குல்கர்னி, 25 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று இந்தியா திரும்பினார்.
நடிகை மம்தா குல்கர்னி கடந்த 1991 ஆம் ஆண்டு தமிழில் வெளியான நண்பர்கள் படம் மூலம் அறிமுகமானார். இந்த படத்தை நடிகர் விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர் இயக்கியிருந்தார் . படமும் ஓரளவுக்கு பெற்றி பெற்றது. பின்னர், பாலிவுட் படங்களில் நடிக்க தொடங்கிய மம்தா குல்கர்னி, கரண் அர்ஜூன், சப்சே படா கில்லாடி போன்ற படங்களில் நடித்து பாப்புலரானார். தொடர்ந்து, பல ஹிட் படங்களில் நடித்து புகழ் பெற்றார்.
இதற்கிடையே, கடந்த 2016 ஆம் ஆண்டு மும்பையை அடுத்த தானேவில் ஒரு கிலோ எபெட்ரின் என்ற போதைப் பொருளை வைத்திருந்ததாக இருவரை போலீசார் கைது செய்தனர். முதற்கட்ட விசாரணைக்கு பிறகு, மம்தா குல்கர்னி உள்பட மேலும் 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கிட்டத்தட்ட 2,000 கோடி மதிப்பிலான போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக மம்தா, அவரின் கூட்டாளிகள் மீது குற்றம் சாட்டப்பட்டது.
ஆனால், இந்த வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி மம்தா குல்கர்னி விடுவிக்கப்பட்டார். ஆனால், 2000 ஆம் ஆண்டே மம்தா குல்கர்னி இந்தியாவை விட்டு வெளியேறி விட்டார். தற்போது, 25 ஆண்டுகளுக்கு பிறகு, அவர் தாய்நாடு திரும்பியுள்ளார். மும்பை விமான நிலையத்தில் நேற்று வந்திறங்கிய அவர், இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு பிறகு, இந்தியா வந்துள்ளேன். வானத்தில் இருந்து மும்பை நகரை பார்க்கும் போதே என் கண்களில் நீர் திரள தொடங்கி விட்டது. மிகவும் எமோஷனலாக உணருகிறேன் ‘ என்று சொன்ன போதே அவரின் கண்களில் நீர் திரண்டது.
அதே வேளையில், மம்தா குல்கர்னி எந்த நாட்டில் வசிக்கிறார். தனது குடும்பத்தினரை பற்றி எதுவும் வாய் திறக்கவில்லை.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
-எம்.குமரேசன்
நள்ளிரவில் அமைச்சர் சிவசங்கருக்கு வந்த போன்… அடுத்து நடந்தது என்ன?
வரலாற்றை சுட்டிக் காட்டிய பிசிசிஐ : ஐசிசி கூட்டத்தில் வாலை சுருட்டிய பாகிஸ்தான்