சித்தார்த் – அதிதி ராவ் இடையேயான காதல் விவகாரம் அடிக்கடி சமூகவலைத்தளத்தில் பேசப்பட்டு வரும் நிலையில் இருவரும் ஜோடியாக ’டம் டம்’ பாடலுக்கு ஆடும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
சங்கர் இயக்கத்தில் வெளிவந்த பாய்ஸ் படத்தின் மூலம் திரையுலகில் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் சித்தார்த்.
அதன்பின்னர் ஆயுத எழுத்து, 180, காதலில் சொதப்புவது எப்படி, உதயம் என் ஹெச் 4, தீயா வேலை செய்யணும் குமாரு, படங்களில் நடித்துள்ளார்.
இதில் ஜிகர்தண்டா, காவிய தலைவன் சிவப்பு மஞ்சள் பச்சை போன்ற திரைப்படங்கள் சித்தார்த்துக்கு நல்ல பெயரை ஏற்படுத்தின.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி திரையுலகிலும் கவனம் செலுத்தி வரும் சித்தார்த் கடைசியாக, மஹா சமுத்திரம் என்ற தெலுங்கு படத்தில் நடிகை அதிதி ராவ் ஹைதாரியுடன் ஜோடி சேர்ந்து நடித்திருந்தார். அப்போது முதல் இருவரும் காதலித்து வருவதாக சினிமா வாட்டாரத்தில் பேச்சு எழுந்தது.
மகா சமுத்திரம் பட புரோமோஷனுக்கு இருவரும் ஒரே காரிலேயே சென்றனர். கடந்த ஆண்டு நடந்த பொன்னியின் செல்வன் பாடல் வெளியீட்டு விழாவிற்கும் இருவரும் ஜோடியாக வந்தனர்.
சமீபத்தில் ’கணம்’ பட நடிகர் சர்வானந்த்தின் நிச்சயத்திற்கும் இருவரும் ஜோடியாக சென்று வாழ்த்தினர்.
எனினும் அதிதி மற்றும் சித்தார்த் இருவரும் தங்கள் உறவைப் பற்றி இதுவரை வெளிப்படையாக எதையும் தெரிவிக்கவில்லை.
இந்நிலையில் நடிகை அதிதி ராவும் சித்தார்த்தும் விஷால் நடித்த எனிமி படத்தில் வரும் “டம் டம்” பாடலுக்கு ஜோடியாக இணைந்து நடனமாடி உள்ளனர்.
இதனை தனது இன்ஸ்டாகிரம் பக்கத்தில் ‘Dance monkeys – The Reel deal’ என்று அதிதி ராவ் வெளியிட்டார்.
நடிகை ஹன்சிகா மோத்வானி, இந்த வீடியோவை ’க்யூட்’ என்று வர்ணித்துள்ளார். நடிகர் நகுல், இந்த வீடியோவிற்கு 10/10 மதிப்பெண்கள் கொடுத்துள்ளார்.
இந்த வீடியோ இதுவரை 4 லட்சத்திற்கு மேலான ரசிகர்கள் லைக் செய்துள்ள நிலையில் 4 மில்லியன் பார்வைகளை பெற்று வைரலாகி வருகிறது.
கடந்த 2 வருடத்திற்கும் மேலாக ஜோடியாக வலம் வரும் இருவரும் விரைவில் நட்சத்திர ஜோடிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிறிஸ்டோபர் ஜெமா
சென்னை: வணிக வளாகமாக மாறும் பஸ் டிப்போக்கள்!
வேலைவாய்ப்பு: சென்னை மாநகராட்சி அறிவிப்பு!