தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என்று கொண்டாடப்படுபவர் இயக்குனர் ஷங்கர். இவரது மகளான அதிதி ஷங்கர் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக விருமன் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். விருமன் படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயனுடன் அதிதி ஷங்கர் நடித்த மாவீரன் படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. Aditi Shankar Pair with Suriya
மாவீரன் படத்தில் நடித்தது மட்டுமின்றி அந்த படத்தில் இடம்பெற்ற “வண்ணாரப்பேட்டையில” என்ற ஒரு பாடலையும் நடிகர் சிவகார்த்திகேயன் உடன் இணைந்து நடிகை அதிதி ஷங்கர் பாடியிருப்பார்.
மாவீரன் படத்தின் வெற்றிக்குப் பிறகு பல பட வாய்ப்புகள் அதிதி ஷங்கர் வீட்டு கதவை தட்டினாலும், பொறுமையாக ஆலோசித்து தனக்கு ஏற்ற கதைகளை மட்டுமே அதிதி தேர்ந்தெடுக்கிறாராம்.
இந்நிலையில் அடுத்ததாக அதிதி நடிகர் சூர்யா படத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. சூரரைப் போற்று படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குனர் சுதா கொங்கரா மற்றும் நடிகர் சூர்யா மீண்டும் இணைந்து பணியாற்றும் படம் சூர்யா 43 ‘புறநானூறு’. இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு கூடிய விரைவில் தொடங்க உள்ள நிலையில் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் அதிதி நடிக்க இருப்பதாக சில தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
ஏற்கனவே இந்த படத்தில் நடிகர் சூர்யாவுடன் நடிகர்கள் துல்கர் சல்மான்,விஜய் வர்மா, நடிகை நஸ்ரியா ஆகிய நட்சத்திரங்கள் நடிக்க இருக்கும் நிலையில் தற்போது இவர்களுடன் அதிதியும் இணைந்துள்ளார் என்று சொல்லப்படுகிறது.
இந்த படத்தில் நடிகர் சூர்யா கல்லூரி மாணவராக நடிக்க உள்ளார். மேலும் இந்த படம் 80ஸ் காலகட்டத்தில் நடப்பது போல் படமாக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
நெல்லை மேயர் விவகாரம்: தங்கம் தென்னரசு, அன்பகம் கலை நடத்திய க்ளைமேக்ஸ் பஞ்சாயத்து!
உத்தரப்பிரதேசத்தில் ஒரே மாதத்தில் மேலும் ஐந்து விமான நிலையங்கள்!
அல்லு அர்ஜூன் படத்திற்கு இவ்வளவு எதிர்ப்பார்ப்பா?… அப்போ தமிழ் படங்கள்?
கோயம்பேட்டில் பொங்கல் சிறப்பு சந்தை: விற்பனைக்குக் குவியும் மஞ்சள் – கரும்பு கட்டுகள்!
Aditi Shankar Pair with Suriya