ராக்கி, சாணிக் காகிதம் போன்ற படங்களை இயக்கி தமிழ் சினிமா ரசிகர்கள் இடையே பிரபலமானவர் இயக்குனர் அருண் மாதேஸ்வரன்.
தற்போது இவரது இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் கேப்டன் மில்லர். இந்த படத்தில் நடிகர் தனுஷுடன் நடிகை பிரியங்கா மோகன், கன்னட சூப்பர்ஸ்டார் சிவராஜ்குமார், சந்திப் கிஷன், நிவேதா உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர்.
கேப்டன் மில்லர் படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைக்க, சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.
சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டீசர் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதில் கேப்டன் மில்லர் படம் வரும் டிசம்பர் 15ஆம் தேதி திரைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் கேப்டன் மில்லர் படத்தில் அருவி படத்தின் மூலம் பிரபலமான நடிகை அதிதி பாலன், ஓர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.
மேலும் தனுஷின் கேப்டன் மில்லர் படத்திற்கு இரண்டு பாகங்கள் இருப்பதாகவும் முதல் பாகத்தில் அதிதி பாலனின் கதாபாத்திரம் சில காட்சிகளில் மட்டும்தான் இடம் பெறும் என்றும், இரண்டாவது பாகத்தில் அதிதி பாலனின் கதாபாத்திரம் தான் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.
மேலும் கேப்டன் மில்லர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் கூடிய விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கார்த்திக் ராஜா
’மகளிர் இட ஒதுக்கீடு… உத்தரவாதம் இல்லை’: உரிமை மாநாட்டில் தலைவர்கள் பேச்சு!
INDvsPAK: ஆக்ரோசம் காட்டிய இந்தியா… ஆல் அவுட்டான பாகிஸ்தான்!