adipurush movie twitter review

”ஆதிபுருஷ்”: ட்விட்டர் விமர்சனம் இதோ!

சினிமா

இந்தியாவில் பிறந்த அனைவருக்கும் ராமாயண கதை தெரியும். கருப்பு வெள்ளை காலத்தில் இருந்து தற்போதைய டிஜிட்டல் தொழில்நுட்பம் வரை பல வகையில் ராமாயண கதை படமாக, தொலைக்காட்சி தொடர்களாக உருவாக்கப்பட்டுள்ளது.

பாடப்புத்தகங்களில் கதையாகவும் ஏராளமானவர்கள் படித்திருப்பார்கள். இப்படிப்பட்ட ராமாயண கதையை மையமாக வைத்து இயக்குநர் ஓம்ராவத் “ஆதிபுருஷ்” படத்தை இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் ராமனாக பிரபாஸ், சீதையாக கீர்த்தி சனோன், இராவணனாக சைப் அலி கான், அனுமனாக தேவ்தத்தா நாகே உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

மொத்தம் ரூ.500 கோடி பட்ஜெட்டில் மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில் உருவாகிய இந்த படத்தின் டீசர் சமூக வலைத்தளங்களில் சினிமா ரசிகர்களால் விமர்சிக்கப்பட்டது. அதற்கு காரணம் படத்தில் இடம்பெற்றிருந்த மோசமான கிராபிக்ஸ்.

இதனால் ரூ.100 கோடி செலவு செய்து கிராபிக்ஸ் தரத்தைப் படக்குழு மாற்றியது.
மேலும் பான் இந்தியா படமான இதற்குத் தெலுங்கு மொழியைத் தவிர வேறு எந்த மொழியிலும் பத்திரிக்கையாளர் சந்திப்பை படக்குழு நடத்தவில்லை. ஆதிபுருஷ் வட இந்தியாவில் முன்பதிவு சிறப்பாக இருந்ததாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.

இதனிடையே ஆதிபுருஷ் வெளியாகும் திரையரங்கில் அனுமனுக்கு ஒரு இருக்கையை காலியாக விட வேண்டும் என்று படக்குழு அறிவித்திருந்தது. ஒரு பக்கம் ட்ரெய்லரில் மோசமான விமர்சனங்களைப் பெற்றாலும் மறு பக்கம் முழு படமும் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது.

இந்நிலையில் ஆதிபுருஷ் படம் திரையரங்குகளில் இன்று (ஜூன் 16) வெளியானது. படம் பார்த்த பிறகு பார்வையாளர்கள் அவர்களது விமர்சனத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

மோனிஷா

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *