குந்தவை, நந்தினியாக மாறிய நடிகைகள்!

சினிமா

பொன்னியின் செல்வன் நாவல் திரைப்படமாக தயாரிக்கும் அறிவிப்பு வெளியான பின்பு அந்த நாவலின் விற்பனை அதிகரித்தது.

நாவலின் கதை சுருக்கத்தை கூறுகிறோம் என ஏராளமான  யூடியூப் சேனல்கள் ஆடியோ வடிவில், கார்ட்டூன் புகைப்பட வடிவங்களில் கதைகளை சொல்லி வந்தன.

பொன்னியின் செல்வன் நாவலில் குறிப்பிடப்பட்டுள்ள குந்திதேவி வாழ்விடமான பழையாறை, பழுவேட்டரயர்கள் ஆட்சி புரிந்த பழுவூர்,

ஆகிய ஊர்கள் இப்போது எப்படி இருக்கிறது என நேரடியாக அந்தந்த இடங்களுக்கு சென்று கட்டுரைகளை வெளியிட்டது ஊடகங்கள்.

பொன்னியின் செல்வன் நாவல் நாட்டுடைமையாக்கப்பட்டதால் எல்லாப் பதிப்பகங்களும் புத்தகமாக வெளியிட்டன.

புரமோஷனுக்காக படத்தில் இடம்பெற்றுள்ள முக்கிய கதாபாத்திரங்களின் புகைப்படங்களை படத்தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டிருந்தது.

அதில் குந்தவை, நந்தினி கதாபாத்திரங்களில் நடித்துள்ள த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் புகைப்படங்களை பொன்னியின் செல்வன் நாவலுக்கு அட்டைப் படமாக்கி சுட சுட விற்பனைக்கு புத்தக கண்காட்சிகளில் வைத்தனர்

ஒரு திரைப்படம் வெற்றி அடைகிறபோது, அல்லது பிரபலமான நட்சத்திரங்கள் இவர்களை கொண்டு தங்கள் தயாரிப்புகளை விளம்பரப்படுத்திக்கொள்ளும் வணிக பழக்கம் இங்கு உள்ளது,

படத்தில் கதாநாயகன் என்ன கெட்டப்பில் வருகிறாரோ, என்ன உடை அணிந்துள்ளாரோ அதே போன்று அவரது தீவிர ரசிகர்களும் திரைப்படம் பார்க்க வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

சமீப காலமாக முன்னணி நடிகர்களின் படங்களில் இடம் பெறும் பாடல்களுக்கு நடனமாடி சமூகவலைதளங்களில் வெளியிடுவதை மொழி வித்தியாசமின்றி திரைக்கலைஞர்கள் செய்துவருகின்றனர்.

அந்த வகையில் பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக நடித்திருக்கும்” த்ரிஷா”, நந்தினியாக நடித்திருக்கும் “ஐஸ்வர்யாராய்” இருவரது தோற்றமும் எல்லோரையும் வசீகரிக்க கூடியதாக உள்ளது,

குறிப்பாக பெண்கள் மத்தியில் அதே போன்ற அணிகலன்கள், உடைகள், அணிந்து புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட தொடங்கியுள்ளனர்.

Actresses who became Kundavai and Nandini

விருமன் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள அதிதி ஷங்கர் குந்தவை கெட்டப்பில் உடையணிந்து புகைப்படங்களை வெளியிட்டார்.

Actresses who became Kundavai and Nandini

அதனை தொடர்ந்து, மானாட மயிலாட டைட்டில் வின்னர் சின்னத்திரை நடிகையான ஸ்வேதா சுப்பிரமணியன், விஜய் டிவியில் ஒளிபரப்பான சின்னத்தம்பி சீரியலின் மூலமாக பிரபலமானவர்.

Actresses who became Kundavai and Nandini

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த யாரடி நீ மோகினி சீரியலின் மூலமாக அறிமுகமானவர் நடிகை அக்க்ஷயா.

Actresses who became Kundavai and Nandini

இவர்கள் இருவரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நந்தினி தேவி மற்றும் குந்தவை கேரக்டரில் அவர்கள் அணிந்திருக்கும் ஆடை முதல் அணிகலன்கள் வரை அனைத்தையும் சரியாக அணிந்து போட்டோ சூட் எடுத்து அந்த புகைப்படங்களை சமூகவலைதளங்களில் பதிவிட்டுட்டுள்ளனர்.

Actresses who became Kundavai and Nandini

இதற்கு ஆதரவாக, எதிராக புகைப்படங்களை பார்த்தவர்கள் கருத்திட்டு வருகின்றனர்.

அனைத்து மத கூட்டு பிரார்த்தனையில் பங்கேற்ற ராகுல் காந்தி

வேலைவாய்ப்பு : இந்தியன் வங்கியில் பணி!

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *