‘காவாலா’ பாடலில் நயன்தாரா, சிம்ரன்

Published On:

| By Jegadeesh

ரஜினி நடித்துள்ள ‘ஜெயிலர்’ படத்தின் ‘காவாலா’ பாடலில் சிம்ரன், சமந்தா, நயன்தாரா, ஹன்சிகா மோத்வானி உள்ளிட்டோர் நடனமாடும் வகையில் ஏஐ மூலம் வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜெயிலர். இந்தப்படத்தில் தமன்னா, ரம்யாகிருஷ்ணன், சிவராஜ்குமார், மோகன்லால், சுனில், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜெயிலர் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இச்சூழலில் கடந்த ஜூலை 6 ஆம் தேதி இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடலான ’காவாலா ’பாடல் வெளியானது. இதில் நடிகை தமன்னா நடனம் ஆடியிருப்பார். இந்த பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

 

 

 

இந்நிலையில், ஏஐ எனப்படும் ஆர்டிஃபிஷியல் இன்டலிஜன்ஸ் (Artificial intelligence) தொழில்நுட்பத்தின் மூலம் ‘காவாலா’ பாடலுக்கு நடிகை சிம்ரன் , சமந்தா, நயன்தாரா, கத்ரினா கைஃப், மாளவிகா மோகனன், கியாரா அத்வானி, ஹன்சிகா மோத்வானி உள்ளிட்டோர் நடனமாடும் வகையில் சித்தரிக்கப்பட்டுள்ளது.

இந்த வீடியோக்களை ஏஐ படங்களை உருவாக்கும் செந்தில் நாயகம் என்பவர் உருவாக்கியிருப்பது  குறிப்பிடத்தக்கது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்த தலைமை செயலாளர்!

தெருநாய்களை கருணை கொலை செய்ய கோரி மனு: உச்சநீதிமன்றம் சொல்வது என்ன?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel