27 ஆண்டுகளுக்கு பிறகு பிரபுதேவாவும், கஜோலும் இணைந்து ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்க உள்ளனர்.
1997-ஆம் ஆண்டு பிரபுதேவா மற்றும் கஜோல் இணைந்து நடித்த படம், “மின்சார கனவு”. இந்த திரைப்படம் ராஜீவ் மேனன் இயக்கத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகி இருந்தது. இந்த படம் வெளியான போது மிகப்பெரிய வெற்றி பெற்றது.
இந்த படம் சிறந்த இசையமைப்பாளர், சிறந்த பாடகர், சிறந்த பாடகி, சிறந்த டான்ஸ் மாஸ்டர் ஆகிய 4 தேசிய விருதுகளை பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், 27 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பிரபுதேவா மற்றும் கஜோல் இணைந்து நடிக்கும் படம் தெலுங்கில் உருவாகி வருகிறது.
அதிரடி கலந்த திரில்லர் கதையம்சம் கொண்ட இந்த படத்தை சரண்தேஜ் உப்பிலபதி இயக்கி வருகிறார். மேலும், இந்த படத்தில் சம்யுக்தா மேனன், நஸ்ருதீன் ஷா, சென்குப்தா, ஆதித்யா ஷீல் உள்ளிட்ட பலர் நடித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் இசையில் உருவாகி வரும் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகவும், விரைவில் இந்த படத்தின் டீசர் வெளியாகும் என்றும் படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
27 ஆண்டுகளுக்கு முன்பு பிரபுதேவா-கஜோல் நடித்த “மின்சார கனவு” படத்தில் இடம்பெற்ற “வெண்ணிலவே.. வெண்ணிலவே..” என்னும் பாடல் தற்போது வரை சமூக வலைதளங்களில் டிரெண்டிங்காக உள்ளது என்பது குறிப்பிடத்தகது.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
காவேரி கூக்குரல்… ஈஷாவுக்கு அமைச்சர் நேரு புதிய கோரிக்கை!
மழைக்கு ரெஸ்ட்… மீண்டும் கொளுத்தப்போகும் வெயில்: வானிலை மையம் அப்டேட்!