மகள் என்று அழைத்தார், திடீரென கல்யாணம் பண்ணிட்டார்! – பிரபல இயக்குநர் குறித்து வடிவுக்கரசி

சினிமா

இயக்குநர் பாலு மகேந்திரா தமிழில் தவிர்க்க முடியாத இயக்குநராக வலம் வந்தவர். தமிழில் இவர் ஒளிப்பதிவு செய்த முதல் படம், முள்ளும் மலரும். ரஜினிகாந்த் நடித்த இந்த படம் சக்கை போடு போட்டது.  1979 ஆம் ஆண்டு இவர் இயக்கிய முதல் தமிழ் படம் “அழியாத கோலங்கள் ஆகும்.  மூடுபனி, மூன்றாம் பிறை, நீங்கள் கேட்டவை, ரெட்டை வால் குருவி, சதிலீலாவதி, உள்ளிட்ட 15 படங்களை இயக்கியுள்ளார்.

இந்தி, தெலுங்கு, மலையாளம் மொழிகளிலும் படங்களை இயக்கியுள்ளார்.இயக்குனர் பாலா, வெற்றி மாறன் உள்ளிட்ட பலர் இவரின் பட்டறையில் உருவானவர்கள்.

பாலு மகேந்திரா அகிலா என்பவரை முதலில் திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு ஒரு குழந்தை உண்டு. பிறகு நடிகை ஷோபாவை திருமணம் செய்துகொண்டார். ஷோபா 17 வயதில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதையடுத்து, நடிகை மௌனிகாவுடன் லிவிங் டுகெதர் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார். ஆனால், பாலு மகேந்திராவுடன் இறுதிவரை வாழ்ந்தது நடிகை மௌனிகா தான். மௌனிகா பாலுமகேந்திராவை விட 30 வயது சிறியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நடிகை ஷோபாவை அழித்த பாலு மகேந்திரா! மூடுபனி ஷூட்டிங்கில் நடந்தது என்ன? சீரியல் நடிகை பேட்டி | Actress Shanti Williams says that Actress Shoba life spoiled by Balu Mahendra ...

இந்நிலையில் நடிகை வடிவுக்கரசி பாலுமகேந்திரா குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியது அதிர்ச்சிரகமாக இருந்தது. வடிவுக்கரசி கூறியதாவது, “எனக்கு சினிமாவில் ஷோபாதான் முதல் தோழி . அவரை, கேகே நகரில் வசித்தபோது அடிக்கடி சந்திப்பேன். பசி படத்துக்காக அவர் தேசிய விருது பெற்றார். அப்போது, அவரை சந்தித்து வாழ்த்து சொல்ல சென்றேன். இந்த சமயத்தில்தான், அவர் பாலுமகேந்திராவை திருமணம் செய்துகொண்டது தெரியவந்தது.

அது எனக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்தது. ஏனெனில் பாலுமகேந்திரா ஒருமுறை ஷோபாவுக்கு என் அன்பு மகளே என்று எழுதி கிஃப்ட் ஒன்றை கொடுத்தார். மகள் மாதிரி பழகிக்கொண்டு அவளையே திருமணம் செய்தது அதிர்ச்சியை கொடுத்தது” என்று தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன் 

அமைச்சரவை மாற்றமா? எனக்கு தகவல் வரலை – சிரித்த முதல்வர் ஸ்டாலின்

மூணெழுத்து மந்திரம்… ஆளப்போற தமிழன் : தவெக கொடிப்பாடலில் கொட்டிக்கிடக்கும் குறியீடுகள்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *