41 வயதா? திரிஷாவின் இளமை ரகசியம் இதுதான்!

Published On:

| By Kumaresan M

நடிகை திரிஷா ‘ஜோடி’ என்ற படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவுக்குள் நுழைந்தார். கில்லி, சாமி போன்ற சூப்பர்ஹிட் படங்களிலும் நடித்துள்ளார். 41 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாதது, திருமணம் நிச்சயமாகி நின்று போனது என இவரைச் சுற்றி பல சர்ச்சைகள் இருந்தாலும், திரிஷா எப்போதும் இளமை மாறாமல்தான் இருக்கிறார்.

இவரது நடிப்பில் கடைசியாக தமிழில் நடித்து வெளிவந்த படம் லியோ.  தற்போது விடாமுயற்சி, தக் லைஃப் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் திரிஷா, 20 வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். 20 வருடங்களாக சினிமாவில் நடிப்பது எல்லாம் கதாநாயகிகளுக்கு சவால் நிறைந்த விஷயம் என்றால் மிகையல்ல.

த்ரிஷாவின் அழகுக்கு முக்கிய காரணம் இவருடைய டயட் மற்றும் ஜிம் ஒர்க் அவுட் என்று கூறப்படுகிறது. சிறு வயதில் இருந்தே அசைவ உணவுகளை தவிர்த்து அதிக காய்கறிகளை தன் உணவில் சேர்த்து கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார். வீட்டில் தன் தாயார் கைகளால் சமைக்கப்படும் உணவையே திரிஷா அதிகம் சாப்பிடுவார் என்று கூறுகிறார்கள்.

படப்பிடிப்புக்கு போனால் மட்டுமே நட்சத்திர ஹோட்டல் உணவுகளை எடுத்துக் கொள்வாராம். எண்ணெயில் பொரித்த உணவுகளை அறவே எடுத்துக் கொள்ள மாட்டார் என்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர்.

இவ்வாறு செய்வதன் மூலம் உடல் எடையைக் கட்டுக்குள் வைத்து கொள்கிறார். மனதை ஆரோக்கியமாக வைத்து கொள்ள, யோகா மற்றும் மெடிட்டேஷன் போன்றவற்றிலும் திரிஷா கவனம் செலுத்துகிறார். தேக பராமரிப்புக்கு விட்டமின் சி நிறைந்த பழங்களை ஜூஸாகவோ அல்லது பழங்களாகவோ எடுத்து கொள்வதும் வாடிக்கை.

-எம்.குமரேசன் 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

இங்கிலாந்து முன்னாள் கேப்டன் கிரஹாம் தோர்ப் மரணம்… வெளியான அதிர்ச்சி தகவல்!

“பதவிக்காலம் முடிந்தும் ஆளுநர் பதவியில் தொடர்வது ஏன்?” – தேநீர் விருந்தை புறக்கணித்த காங்கிரஸ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share