’அனிமல் ‘ படத்திற்கு வந்த விமர்சனங்கள் தன்னை மிக அதிகமாக பாதித்தது எனவும், அதனால் பல நாட்கள் தான் அழுததாகவும் அந்தப் படத்தில் நடித்த நடிகை திருப்தி டிமிரி தெரிவித்துள்ளார்.
இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர், அனில் கபூர், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் நடிப்பில் சில மாதங்களுக்கு முன்பு வெளியான திரைப்படம் ’அனிமல்’.
பாக்ஸ் ஆஃபிஸ் ரீதியாக பல வசூல் சாதனைகளை படைத்த இந்தத் திரைப்படம் பேசிய சில சர்ச்சை கருத்துகளுக்காக பல்வேறு விமர்சனங்களையும் சந்தித்தது.
குறிப்பாக நடிகை திருப்தி டிமிரி நடித்த காட்சிகளுக்கு அதிக அளவில் விமர்சனங்கள் எழுந்தது.
இந்த நிலையில் ஒரு பாட்காஸ்ட் உரையாடலில் பேசிய அவர், “அனிமல்’ படத்திற்கு முன்னால் என்னை நோக்கி எந்த ஒரு விமர்சனமும் வந்தது இல்லை. ஆனால், ‘அனிமல்’ படத்திற்கு பிறகு பல விமர்சனங்களுக்கு நான் உள்ளானேன்.
ஜனரஞ்சக தளத்தில் அந்தப் படம் வெளியானது இதற்கு காரணமாக இருக்கக் கூடும். ஏறத்தாழ ஒரு மாதத்திற்கு எனக்கு என்ன நடந்ததென்றே புரியவில்லை. என்னை சுற்றி ஏன் இத்தனை விமர்சனங்கள் எனத் தோன்றியது.
பாதி பேர் என்னை கொண்டாடினால் சரியாக பாதி பேர் கடுமையாக விமர்சித்தனர். அப்படிப்பட்ட கனத்தை கடந்து வரவே மிகக் கடினமாக இருந்தது. ’அனிமல்’ படம் வெளியாகி ஒரு மூன்று நாட்களாவது நான் அழுதிருப்பேன். எனக்கு இது போல் நடந்ததே இல்லை. என்னைப் பற்றி மிகக் கேவலமாக எழுதத் தொடங்கினர்.
அனைத்தையும் அமைதியாக ஏற்றுக்கொள் என என் சகோதரி சொன்னார். ஆனால் எனக்கு மிக இலகுவான மனசு. என்னால் அதை அவ்வளவு எளிதாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை” எனப் பேசியுள்ளார்.
நடிகை திருப்தி கடைசியாக நடிகர் விக்கி கௌசல் நடிப்பில் வெளியான ‘பேட் நியூஸ்’ படத்தில் நடித்திருந்தார். அடுத்ததாக பல இந்தி திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
– ஷா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஆசிரியர்கள் போராட்டம்: ஊதியம் விடுவிக்கப்படும்… உதயநிதி உறுதி!
சிதம்பரம் கோவிலில் கிரிக்கெட் விளையாடிய தீட்சிதர்கள்… நடவடிக்கை எடுக்கத் தயங்கியதா போலீஸ்?
“சாம்சங் ஊழியர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்”… எடப்பாடி வலியுறுத்தல்!
ஒரே நேரத்தில் 50 மருத்துவர்கள் ராஜினாமா: எதற்காக?
பியூட்டி டிப்ஸ்: வறண்ட சருமம் உள்ளவர்களே… இதையெல்லாம் செய்யாதீர்கள்!