30 வயது பெண்ணாக இனி நடிக்கமாட்டேன்: நடிகை தபு

சினிமா

நடிகை தபு, இனி இளம் வயதுடைய கதாபாத்திரத்தில் நடிக்கமாட்டேன் என்று கூறியுள்ளார்.

இந்திய சினிமாவில் 60 வயது கடந்த நடிகர்கள் கதாநாயகனாகத்தான் நடிப்பேன் என்று சொல்லி வரும் வேளையில், தன் வயதுக்கு ஏற்ற கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் இந்தி சினிமாவின் சூப்பர் ஸ்டார் என புகழப்படும் நடிகர் அமிதாப்பச்சன்.

அதே போன்று 40 வயதை எட்டிப் பிடிக்கும் நயன்தாரா, 40 வயதை கடந்து விட்ட த்ரிஷா போன்ற நடிகைகள் முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாகவும் இல்லையென்றால் கதையின் நாயகியாகவும் நடிப்பதில் உறுதியாக இருந்து வருகின்றனர்.

இந்த சூழலில் 50 வயதை கடந்த நடிகை தபு இனிமேலும் என்னால் 30 வயது கொண்ட ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க முடியும் என்று தோன்றவில்லை. என் வயதை ஒட்டிய கதாபாத்திரங்களில் நடிப்பதை தவிர எனக்கு வேறு வழியில்லை என கூறியுள்ளார்.

அஜய்தேவ்கான்-தபு நடித்துள்ள ‘Auron Mein Kahan Dum Tha’ எனும் இந்திப் படம் வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்தப் படத்தில் தபுவின் இளமை கதாபாத்திரத்தில் சாய் மஞ்சரேகர் நடித்துள்ளார்.

இந்தப் படம் குறித்து ஊடகங்களுக்கு தபு கொடுத்த பேட்டியில், “30 வயது பெண்ணாக நடிக்க எனக்கு வாய்ப்புகள் வந்தது. நான் அதையெல்லாம் மறுத்து வருகிறேன்.

ஏனென்றால் இனிமேலும் என்னால் 30 வயது கொண்ட ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க முடியும் என்று தோன்றவில்லை. என் வயதை ஒட்டிய கதாபாத்திரங்களில் நடிப்பதை தவிர எனக்கு வேறு வழியில்லை

சில சமயங்களில் பார்வையாளர்களுக்கு திரையில் நடிக்கும் நடிகர்களின் உண்மையான வயது தெரியும்போது, நீங்கள் டீ-ஏஜிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தினாலும் அது வேடிக்கையாக இருக்கும்.

நாம் தற்போது எப்படியிருக்கிறோம் என்பதை பார்வையாளர்கள் பார்த்திருக்கிறார்கள்.

ஆனால் எல்லாமே படத்தையும், அதன் உள்ளடக்கத்தையும் பொறுத்துதான் வெற்றிகள் கிடைக்கும். சில படங்களில் வயதான நடிகர்கள் இளம் வயது கதாபாத்திரங்களில் சிறப்பாக பொருந்தியுள்ளனர்.

அது பார்வையாளர்களிடம் எந்த நெருடலலையும் ஏற்படுத்தவில்லை” என கூறியுள்ளார்.

இராமானுஜம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

“இயக்குநருக்கு கதைப் பிடிப்பு ஹீரோயினுக்கு சதைப் பிடிப்பு” – பேரரசு சர்ச்சை பேச்சு!

ஆம்ஸ்ட்ராங் வழக்கில் கைது: தமாகாவில் இருந்து ஹரிகரன் நீக்கம்!

உச்சநீதிமன்ற நீதிபதியாக ஆர்.மகாதேவன் பதவியேற்பு!

காந்திபாபுவின் கம்பி கட்டும் கதை: ஏமாற்று வித்தைகளை அம்பலப்படுத்திய ‘சதுரங்க வேட்டை’!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *